IPL 2025 Tickets Booking: என்ன மக்களே ரெடியா! தொடங்க போகும் ஐபிஎல் டிக்கெட் விற்பனை.. எப்படி புக் செய்வது?
IPL 2025 Tickets Booking Online: ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை BookMyShow மற்றும் Paytm Insider போன்ற தளங்கள் மூலமாகவோ அல்லது ஸ்டேடியம் பாக்ஸ் ஆபிஸில் ஆஃப்லைனிலோ வாங்கலாம்.

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 18வது சீசன் வருகிற மார்ச் 22, 2025 அன்று தொடங்க உள்ளது, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியை நேரடி ஆட்டத்தைக் காண ஆர்வமுள்ள ரசிகர்கள் பல்வேறு ஆன்லைன் தளங்கள் மூலம் தங்கள் டிக்கெட்டுகளைப் பெறலாம். BookMyShow மற்றும் Paytm போன்ற அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் செயலிகள் மூலம் ஆன்லைன் டிக்கெட் முன்பதவிகளை செய்யலாம். ஐபிஎல் டிக்கெட் விவரங்களை குறித்து கீழே காணலாம்.
இதையும் படிங்க:IPL 2025: கிரிக்கெட் திருவிழா ஆரம்பமாகுது! சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிகள் விவரம் இங்கே!
டிக்கெட் விலை:
டிக்கெட் விலைகள் இடம், போட்டி நடக்கும் மற்றும் இருக்கை வகையைப் பொறுத்து மாறுபடும், சாதரண இருக்கைகள் ₹800 முதல் ₹1,500 வரையும், பிரீமியம் இருக்கைகள் ₹2,000 முதல் ₹5,000 வரை, மற்றும் VIP அல்லது பாக்ஸ் டிக்கெடுகள் ₹6,000 முதல் ₹20,000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் டிக்கெட் பெறுவது எப்படி?
ஐபிஎல் 2025 டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வதை என்பது பல அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் மூலம் முடிக்கக்கூடிய ஒரு நேரடியான செயல்முறையாகும். ஆன்லைனில் டிக்கெட்டுகளை எப்படி, எங்கு வாங்குவது என்பது குறித்தும் எப்படி புக் செய்யலாம் என்பதை இங்கே காணலாம்..
இதையும் படிங்க: IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளங்கள்
- BookMyShow: ஐபிஎல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான முதன்மையான தளங்களில் இதுவும் ஒன்றாகும். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய நீங்கள் Bookmyshow செயலி மற்றும் வலைத்தளத்தை மூலமும் அல்லது வலைதளத்தின் மூலமும் டிக்கெட்டை முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.
- PAYTM: பல்வேறு கட்டண விருப்பங்களைப் பயன்படுத்தி ஐபிஎல் டிக்கெட்டுகளை எளிதாக முன்பதிவு செய்யக்கூடிய மற்றொரு பிரபலமான த
- IPLT20.com: அதிகாரப்பூர்வ ஐபிஎல் வலைத்தளம் மூலமும் டிக்கெட் முன்பதிவு செய்துக்கொள்ளலாம்
- Insider.in: இந்த செயலியின் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான வழிமுறை:
- BookMyShow, Paytm, அல்லது IPLT20.com க்குச் செல்லவும்.
- போட்டியைத் தேர்ந்தெடுக்கவும்:
- வரவிருக்கும் போட்டிகளின் பட்டியலிலிருந்து நீங்கள் கலந்து கொள்ள விரும்பும் போட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.
- இருக்கை வகையைத் தேர்வுசெய்க:
- உங்களுக்கு விருப்பமான இருக்கை வகையைத் தேர்ந்தெடுக்கவும், இது பொது முதல் விஐபி வரை இருக்கலாம்.
ஐபிஎல் போட்டிகளுக்கான முன்பதிவு பொதுவாக போட்டிக்கு 2-3 வாரங்களுக்கு முன்பு தொடங்கும்.





















