மேலும் அறிய

NEET UG Registration: அலர்ட் மாணவர்களே… நீட் தேர்வு விண்ணப்பிச்சாச்சா? நாளையே கடைசி- இதோ Guide!

NEET UG Registration 2025: இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி நாளை ஆகும்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப் படிப்புகளிலும் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளிலும் சேர நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டது. இந்தத் தேர்வு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் சுருக்கம் ஆகும்.

தேர்வு எப்போது?

2025ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 7) கடைசித் தேதி ஆகும். 

விண்ணப்பிக்க என்ன தகுதி?

  • சம்பந்தப்பட்ட தேர்வர், 12ஆம் வகுப்பில் ஒட்டுமொத்தமாக 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
  • நீட் இளங்கலைத் தேர்வை எழுத, விண்ணப்பிக்கும் தேர்வர்களின் வயது, மாணவர் சேர்க்கையின்போது 17 நிறைவு அடைந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் உச்ச வயது வரம்பு எதுவுமில்லை.
  • விண்ணப்பதாரர்கள் வேதியியல், இயற்பியல், உயிரியல்/ உயிர் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் தனித்தனியாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பிற வகைகளில் அனுப்பப்படும் விண்ணப்பப் படிவம் ஏற்கப்படாது.
  • ஒரு தேர்வர் ஒரு படிவத்தை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட படிவம் இருந்தால், அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படும் அல்லது நிறுத்தி வைக்கப்படும், அல்லது தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும்.
  • இ மெயில் முகவரி, மொபைல் ஆகியவை உங்களுடையதாக அல்லது உங்கள் பெற்றோர்/ பாதுகாவலரின் விவரமாக இருக்க வேண்டும். அந்த எண், இ மெயில் முகவரிக்குத்தான் விவரங்கள் அனுப்பப்படும்.
  • அனைத்து கேள்விகளுக்கும் உரிய விடையை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் விண்ணப்பம் ஏற்கப்படாது.
  • வருங்காலத் தேவைக்காக, கட்டணம் செலுத்தியது உள்ளிட்ட முக்கிய விவரங்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • 2 முறை விண்ணப்பக் கட்டணம் தவறுதலாக செலுத்தப்பட்டு விட்டால், என்டிஏ சம்பந்தப்பட்ட தேர்வருக்கு கட்டணத்தைத் திரும்பச் செலுத்திவிடும்.
  • ஏற்கெனவே முன்பதிவு செய்த தேர்வர்கள், https://examinationservices.nic.in/neet2025/root/CandidateLogin.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFcFR+natXIEjJ1rCf6DMgOr/hcv4rs34T5gNmvCx/R+a என்ற இணைப்பின் மூலம் வின்ணப்பிக்க வேண்டும்.
  • முதல் முறையாக விண்ணப்பிக்கும் நபர்கள், https://examinationservices.nic.in/NEET2025/Registration/Instruction.aspx என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்த பிறகே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முன், தேர்வர்கள் என்டிஏ அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். https://cdnbbsr.s3waas.gov.in/s37bc1ec1d9c3426357e69acd5bf320061/uploads/2025/02/2025020754.pdf என்ற இணைப்பில் இந்த அறிவிக்கையை பதிவிறக்கம் செய்யலாம்.

தேர்வுக் கட்டணம்

பொதுத் தேர்வர்களுக்கு – ரூ.1,700

பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர், ஓபிசி க்ரீமி லேயர் அல்லாதோர்- ரூ.1,600

எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள்/ மூன்றாம் பாலினத்தவர் – ரூ.1000

வெளிநாட்டுத் தேர்வர்கள் – ரூ.9,500

ஹால் டிக்கெட் எப்போது?

ஏப்ரல் 26ஆம் தேதி அன்று தேர்வு மையங்கள் குறித்த விவரம் வெளியிடப்படும். ஹால் டிக்கெட்டை மே 1ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என்றும் ஜூன் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகலாம் எனவும் என்டிஏ தெரிவித்துள்ளது.

முழு விவரங்களுக்கு: https://cdnbbsr.s3waas.gov.in/s37bc1ec1d9c3426357e69acd5bf320061/uploads/2025/02/2025020754.pdf

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

School Student: 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அக்டோபர் 31 வரை கெடு! அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
School Student: 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அக்டோபர் 31 வரை கெடு! அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
Government Employees: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி! ஓய்வூதியப் பிடித்தம் செய்யும் உத்தரவு வாபஸ்!
Government Employees: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி! ஓய்வூதியப் பிடித்தம் செய்யும் உத்தரவு வாபஸ்!
கலைஞர் பெயரில் Ph.D ஆராய்ச்சி உதவித்தொகை.. லண்டன் பல்கலை.,யில் சபரீசன் தொடங்கிய சூப்பர் திட்டம்!
கலைஞர் பெயரில் Ph.D ஆராய்ச்சி உதவித்தொகை.. லண்டன் பல்கலை.,யில் சபரீசன் தொடங்கிய சூப்பர் திட்டம்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
Embed widget