டயட்ல அதிக புரதம் உணவுகளும் ஆரோக்கியமானது இல்லை!

Published by: ஜான்சி ராணி

உணவில் புரத சத்து நிறைந்திருப்பது முக்கியமான ஒன்றாகும். நம் உடலில் ஒவ்வொரு செல்லும், திசுக்களும், சதையும், ரத்தமும் புரதத்தினால் ஆனது.

உங்கள் ஹார்மோன், என்சைம், நோய் எதிர்ப்பு செல்களும் உருவாக அடிப்படை தேவை புரதமே. புரத சத்து சரியான அளவு இருந்தால் மட்டுமே நம்மால் இயங்க முடியும்.

அதிகமாக புரதம் உட்கொள்பவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையும் ஏற்படலாம். காரணம் அவர்கள் குறைந்த அளவில் நார்ச்சத்து உணவை உட்கொள்வதே ஆகும்

அதிகமான அளவு புரதம் உட்கொள்ளும்போது சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம்.

அதிகப்படியான சிவப்பு இறைச்சி, பால் சார்ந்த பொருட்களை சாப்பிடுவது இதயத்தை பாதிக்கலாம்.

ஆரோக்கியமாக இருக்க, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

அன்றாட உணவில் சரிவிகித ஊட்டச்சத்துக்கள் இருப்பதை உறுதிசெய்வது நல்லது.

இது பொதுவான தகவல் மட்டுமே. பிரத்யேக டயட் ஆலோசனைகளுக்கு நிபுணர்களை அணுகுவது நல்லது.