திருவான்மியூர் டு உத்தண்டி இனி 10 நிமிஷம் தான்.. ECR-யை மாற்ற போகும் 16Km உயர்மட்ட பாலம்..
ECR Thiruvanmiyur to Uthandi Elevated Corridor :" சென்னை இ.சி.ஆரில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 16 கிலோமீட்டர் தூரத்திற்கு, உயர்மட்ட மேம்பாலச்சாலை அமைய உள்ளது"

Tidel Park junction To Uthandi Elevated Corridor: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவர, 16 கிலோமீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட மேம்பாலச்சாலை அமைக்கப்பட உள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை - Chennai ECR Road
சென்னையில் தொடர்ந்து மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை புறநகர் பகுதிகளில், குடியிருப்புகளும் கடந்த சில ஆண்டுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னையின் மிக முக்கிய சாலைகளின் ஒன்றாக, சென்னை கிழக்கு கடற்கரை சாலை (Chennai ECR Road) உள்ளது. தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலையை சுற்றி குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர் முதல் அக்கரை வரை உள்ள 11 கிலோமீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 4 வழிச்சாலையாக உள்ள நிலையில், தற்போது 6 வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த சில மாதங்களில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, 6 வழிச்சாலை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை ஆறு வழிச்சாலை திட்டம் (Thiruvanmiyur to Akkarai 6 Lane Road )
திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. வருங்காலங்களில் போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் இது இரண்டு மடங்காக உயர்வதற்கான வாய்ப்புகள், இருப்பதாகவும் சாத்திய கூறுகள் தெரிவிக்கின்றன.
6 வழிச்சாலை பயன்பாட்டிற்கு வந்தாலும், போக்குவரத்து நெரிசல் அதிக அளவு குறையாது, என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர மாற்று வழிகளை யோசிக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்தது.
திருவான்மியூர் டு உத்தண்டி மேம்பால சாலை - ECR Elevated Corridor
இந்தநிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை மையப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க, தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. டைட்டில் பார்க் முதல் எஸ்.பி சாலை வரை, 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று திருவான்மியூர் ரயில் நிலையத்திலிருந்து உத்தண்டி சுங்கச்சாவடி வரை 16 கிலோமீட்டர் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு இறங்கியுள்ளது.
இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணியும் அதற்கான ஆய்வுகளும் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் மேம்பாலச்சாலை அமைக்கப்பட்டால் மிகப்பெரிய போக்குவரத்து புரட்சி ஏற்படும். இது கிழக்கு கடற்கரைச் சாலையில் வெகுதூரம் செல்பவர்களுக்கு வர பிரசாதமாக அமைய உள்ளது.
சிறப்பம்சங்கள் என்ன? Key Features Of Thiruvanmiyur to Uthandi Elevated Corridor
தற்போது இந்த சாலையில், 17 இடங்களில் சிக்னல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இச்சாலையை கடக்க சுமார் 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை ஆகிறது. உயர்மட்ட மேம்பாலம் அமைந்தால் 10 நிமிடத்தில் செல்ல முடியும். அதேபோன்று இந்த மேம்பால சாலையில் 5 இடங்களில், வாகனங்கள் உள்ளே செல்லவும் வெளியே ஏறவும், பிரத்தேக வழிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.
கிழக்கு கடற்கரை சாலையில் மிகப்பெரிய போக்குவரத்து மாற்றத்தை, இந்த உயர்மட்ட மேம்பாலம் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரிடம் நெடுஞ்சாலைத்துறை சமர்ப்பித்து, ஒப்புதல் வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.





















