அதிகம் படித்த திரைப்பட நடிகைகள்...யார் கையில் என்ன டிகிரீ
Highly Educated South Indian actresses : தென் இந்திய நடிகைகளில் அதிகம் படித்த நடிகைகளின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்

அனுஷ்கா ஷெட்டி
2005 ஆம் ஆண்டு தெலுங்கில் நடிகையாக அறிமுகமானவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழில் மாதவன் நடித்த ரெண்டு படத்தில் அறிமுகமானார். அருந்ததி , பில்லா , வேட்டைக்காரன் , சிங்கம் என்ன சோலோவாகவும் , முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் அனுஷ்கா ஷெட்டி. அனுஷ்கா கணினி பயன்பாட்டில் (computer application) இளங்கலை பட்டம் பெற்றுள்ளார் .
சமந்தா
சென்னையில் பிறந்து வளர்ந்த சமந்தா மாஸ்கோவின் காவேரி படத்தில் நாயகியாக அறிமுகமானார். தற்போது தமிழ் , தெலுங்கு , இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். சென்னையில் உள்ள ஹோலி எஞ்சல்ஸ் ஆங்க்லோ இண்டியன் பள்ளியில் படித்த சமந்தா காமர்ஸில் பேச்சுலர் டிகிரீ வைத்துள்ளார்.
த்ரிஷா
கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் நடிகை த்ரிஷா. கடந்த ஆண்டு விஜயின் கோட் படத்தில் நடித்த த்ரிஷா. இந்த ஆண்டு அஜித்தின் விடாமுயற்சி , குட் பேட் அக்லி , கமலின் தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சென்னை எத்திராஜ் கல்லூரியில் தொழில் நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார் த்ரிஷா
நயன்தாரா
கேரளாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் தமிம் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக மாறியுள்ளார் நயன்தாரா. தற்போது மூக்குத்தி அம்மனாக நடிக்க தயாராகி வருகிறார். கேரளாவில் உள்ள மார்தோமா கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பேச்சுலர் பட்டம் பெற்றுள்ளார் நயன்தாரா
தமன்னா
வட இந்தியாவில் இருந்து வந்து கோலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை தமன்னா. மும்பையில் உள்ள நேஷ்னல் காலேஜில் கலையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
ஷ்ரியா சரண்
டெல்லி பல்கலைகழகத்தில் படித்த ஷ்ரியா கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.
காஜல் அகர்வால்
மும்பையில் உள்ள ஜெய் ஹிந்த் கல்லூரியில் மாஸ் மீடியா படித்துள்ளார் காஜல் அகர்வால்
மீரா ஜாஸ்மின்
கேரள பல்கலைகழகத்தில் சமூகவியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார் நடிகை மீரா ஜாஸ்மின்
ராதிகா ஆப்தே
புனேவில் உள்ள ஃபெர்குசன் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் கணிதத்தில் பட்டம் பெற்றுள்ளார் ராதிகா ஆப்தே
சாய் பல்லவி
இளம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையான சாய் பல்லவி ஜார்ஜியாவில் உள்ள திபிலிஸி மருத்துவ பல்கலைகழகத்தில் எம்.பி.பி.எஸ் படித்துள்ளார்

