நாட்டுக்கோழி பண்ணை அமைக்க ஆர்வமா! லட்சத்தை அள்ளித்தரும் அரசு.. மிஸ் பண்ணிடாதீங்க..
Nattu Kozhi Pannai Subsidy: " தமிழ்நாட்டில் நாட்டுக்கோழி பண்ணை அமைப்பதற்கு, தமிழ்நாடு அரசு 1.50 லட்சம் ரூபாய் மானியமாக வழங்குகிறது"

Nattu Kozhi Pannai In Tamil Nadu: " இந்த ஆண்டிற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்பதால், ஆர்வம் உள்ளவர்கள் தயாராக இருத்தல் அவசியம்
"வேலையை உருவாக்குங்கள்"
இன்றைய சூழலில் இளைஞர்கள் பலரும் வேலை கிடைப்பது என்பது கடினமான சூழலாக இருந்து வருகிறது. வேலை செய்து அதன் மூலம் பொருள் ஈட்டுவதும், கடினமான ஒன்றாகவே உள்ளது. எப்போதுமே தனியாக தொழில் தொடங்குவது என்பது, நம்மையும் நம்மை சுற்றி இருப்பவர்களையும், உயர்த்தி விடும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
சமீப காலமாக சுய தொழில் தொடங்க விருப்பம் இருப்பவர்களுக்கு, மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. மானிய விலையில் பொருட்கள் வழங்கப்படும் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மற்றும் இன்குபேட்டர் மிஷின் வழங்கப்பட உள்ளது.
நாட்டுக்கோழி பண்ணை அமைப்பது எப்படி?
தமிழ்நாட்டில் கோழி வளர்ப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு நாட்டுக்கோழி வளர்ப்பை மேம்படுத்தவும், நாட்டுக்கோழி வளர்ப்பவர்களுக்கு வழி காட்டவும் பல்வேறு சலுகைகளுடன் கூடிய மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 250 கோழிகளுடன் கூடிய சிறிய அளவிலான பண்ணை அமைக்க 50% மானியம் வழங்கப்படுகிறது.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, கால்நடை துறையினர் அவர்களுக்கு பயிற்சி அளித்து பண்ணை அமைக்க உதவி செய்து வருகின்றனர். பண்ணை அமைத்தவர்களுக்கு முதல்முறையாக மானியத்துடன் கூடிய "இன்குபேட்டர் மிஷின்" வழங்கப்பட உள்ளது.
நாட்டுக்கோழி பண்ணை அமைக்க எவ்வளவு செலவாகும் ?
நாட்டுக்கோழி பண்ணை அமைக்க வேண்டும் என்றால் அதற்கான கொட்டகை, தீவனம் உள்ளிட்ட உபகரண பொருட்கள் வாங்குவதற்கும், நான்கு மாத பராமரிப்பு செலவு உட்பட ஒரு பண்ணை அமைக்க 3 லட்சம் ( 3 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது). இதில் 1 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மானியமாக தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் உரிய தகுதிகளின் அடிப்படையில் 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 250 நாட்டுக்கோழி குஞ்சுகள் கொடுக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக இன்குபேட்டர் மிஷின் 50% மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் நாட்டுக்கோழி இனவிருத்தி செய்யப்பட்டு, உற்பத்தி பெருக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி? How to Apply Country Chicken Farm Subsidy
இந்த நிதியாண்டு 100 பயனாளர்களுக்கு ஏற்கனவே நாட்டுக்கோழி பண்ணை அமைப்பதற்கான மாநிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த நிதியாண்டிற்கு நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அறிவிப்பு வெளியிடும்போது விண்ணப்பிக்கலாம்.
என்னென்ன தகுதிகள் வேண்டும்?
பண்ணை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும். பண்ணை அமைக்கும் இடம் மக்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து சற்று தள்ளி இருக்க வேண்டும்.பண்ணை அமைய உள்ள இடத்திற்கான சிட்டா மற்றும் அடங்கல் நகல் வேண்டும்.
பயனாளி அதே கிராமத்தில் நிரந்தரமாக வசிக்கக் கூடிய நபராக இருக்க வேண்டும். பண்ணைக்கு மின் இணைப்பு ஏற்படுத்தி இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஆதார் நகல், 50 சதவீதம் நிதி ஆதாரத்திற்கான ஆவணங்கள் கண்டிப்பாக வேண்டும். மூன்று ஆண்டுகள் நிச்சயமாக பண்ணை பராமரிக்கப்படும் என்ற உத்தரவாத சான்றிதழையும் கொடுக்க வேண்டும்.





















