Sunil Chhetri: திரும்ப வந்துட்டேன்..! ரசிகர்கள் ஷாக் - சர்வதே போட்டிகளில் 100வது கோல் அடிப்பாரா சுனில் சேத்ரி?
Sunil Chhetri: இந்திய கால்பந்தாட்ட ஜாம்பவான் சுனில் சேத்ரி தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று, மீண்டும் சர்வதேச போட்டிகளில் களமிறங்க உள்ளார்.

Sunil Chhetri: மார்ச் மாதம் நடைபெற உள்ள சர்வதேச தகுதிச் சுற்றுப் போட்டிகளில், இந்திய அணிக்காக சுனில் சேதிரி விளையாட உள்ளார்.
மீண்டும் களமிறங்கும் சுனில் சேத்ரி
கால்பந்தாட்டத்தில் இந்தியாவுக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமயை பெற்ற, ஜாம்பவானான சுனில் சேத்ரி 9 மாத கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தேசிய அணிக்காக விளையாட உள்ளார். அனைத்து இந்திய கால்பந்தாட்ட சம்மேளனம் இந்த முடிவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. சுனில் சேத்ரி FIFA உலகக் கோப்பை 2026 ஆசிய தகுதிச் சுற்றில், குவைத் அணிக்கு எதிராக தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடி இருந்தார். இந்நிலையில், தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று மார்ச் மாதம் நடைபெற உள்ள சர்வதேச தகுதிச் சுற்றுப் போட்டிகளில், இந்திய அணிக்காக சுனில் சேதிரி விளையாட உள்ளார்.
எப்போது களமிறங்குவார் சுனில் சேத்ரி?
FIFA சர்வதேச போட்டிக்காக சுனில் சேத்ரி தேசிய அணிக்கு திரும்புகிறார் என்று AIFF தெளிவாகக் கூறியுள்ளது. எனவே, மார்ச் 19 அன்று மாலத்தீவுக்கு எதிரான நட்பு ஆட்டத்தில் சுனில் சேத்ரி விளையாட மாட்டார். அதேநேரம், மார்ச் 26 அன்று நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான AFC ஆசிய கோப்பை 2027 மூன்றாவது சுற்று தகுதிச் சுற்றில் இந்தியாவுக்காக விளையாட உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 19 வருடங்கள் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக களம் கண்ட சுனில் சேத்ரி, கடந்த ஆண்டு ஜுன் மாதம் தனது ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
𝐒𝐔𝐍𝐈𝐋 𝐂𝐇𝐇𝐄𝐓𝐑𝐈 𝐈𝐒 𝐁𝐀𝐂𝐊. 🇮🇳
— Indian Football Team (@IndianFootball) March 6, 2025
The captain, leader, legend will return to the Indian national team for the FIFA International Window in March.#IndianFootball ⚽ pic.twitter.com/vzSQo0Ctez
100வது கோல் அடிப்பாரா சுனில் சேத்ரி?
தற்போது இந்தியாவுக்காக சுனில் சேத்ரி 94 கோல்களை அடித்துள்ளார். மேலும் சர்வதேச அளவிலான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை திரும்பப் பெற்றதன் மூலம், 40 வயதான அவர் இந்த மாத இறுதியில் விளையாடவும், இந்த ஆண்டு இறுதியில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவும் அதிக வாய்ப்புகள் இருக்கலாம். கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி மற்றும் அலி டேய் மட்டுமே இந்திய ஜாம்பவானான சுனிலை விட அதிக சர்வதேச கோல்களை அடித்துள்ளனர்.
பெங்களூரு எஃப்சி அணியின் ஸ்ட்ரைக்கரான இஅவர் இந்த சீசனில் அற்புதமான ஃபார்மில் இருக்கிறார். அவர் 2024/25 இந்தியன் சூப்பர் லீக் சீசனில் 12 கோல்களை அடித்துள்ளார், மேலும் 2 அசிஸ்ட்களை வழங்கியுள்ளார். இருப்பினும், அவர்கள் மற்றொரு லீக் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் சாத்தியமற்றதாகத் தெரிகிறது, ஏனெனில் நடப்பு சாம்பியனான மோகன் பாகன் எஸ்ஜி புள்ளிகள் பட்டியலில் பெங்களூரு எஃப்சியை விட 15 புள்ளிகள் முன்னிலை வகிக்கிறது.
இதுவரை விளையாடிய 23 போட்டிகளில், பெங்களூரு எஃப்சி 11 வெற்றிகள், 5 டிராக்கள் மற்றும் 7 தோல்விகளுடன் 38 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மறுபுறம், மோஹுன் பாகன் எஸ்ஜி அணி அதே எண்ணிக்கையிலான போட்டிகளில் 16 வெற்றிகள், 5 டிராக்கள் மற்றும் 2 தோல்விகளுடன் 53 புள்ளிகளைக் கொண்டுள்ளது.





















