மேலும் அறிய
Advertisement
Today Headlines: நேற்றைய சம்பவங்கள், இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பை மொத்தமாக அறிய! 7 மணி தலைப்பு செய்திகள்
Today Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான இரண்டாம் கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் நாளை தொடங்குகிறது - திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை
- வேடசந்தூர் திமுக பிரமுகரின் வீடுகளில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு
- நீதிமன்ற உத்தரவின்படி விவசாயிகளுக்கான காசோலையை ஒப்படைத்தது என்எல்சி நிறுவனம்
- என்எல்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- டெல்டா மாவட்ட காவிரி கரைகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம் - சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தங்கத்தேரில் எழுந்தருளிய மாரியம்மன்
- ஸ்ரீரங்கத்தில் மேளதாளங்கள் முழங்க காவிரி தாயாருக்கு சீர்வரிசை கொடுத்த நம்பெருமாள் - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
இந்தியா:
- ஆகஸ்ட் மாத இறுதியில் தென்னாப்ரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
- டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மசோதா - கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் நிறைவேற்றம் - ஊழலை ஒழிக்கவே மசோதா என உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்
- மும்பையில் வரும் 30ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் - ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை
- வாயை மூடாவிட்டால் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை வரும் - நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்களை மிரட்டிய மத்திய பாஜக அமைச்சர்
- கணினி, மடிக்கணினி உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு - உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு நடவடிக்கை
- கடந்த 2021ம் ஆண்டு செல்போன் பேசியபடி வண்டி ஓட்டியதால் 1040 பேர் பலி - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
- ஜம்மு - காஷ்மீரில் காணாமல் போன ராணுவ வீரர் ஜாவித் கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவம் தகவல் - விரைவில் விசாரணை நடத்த முடிவு
உலகம்:
- தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க முற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு - ஆகஸ்ட் 28ம் தேதி அடுத்தகட்ட விசாரணை
- பிலிப்பைன்சில் விமான விபத்து - இந்திய மாணவர் உட்பட 2 பேர் பலி
- மருந்து உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் இடையே மோதல் - காப்புரிமை விவகாரம் தொடர்பாக ஃபைசர் மீது பிரிட்டன் நிறுவனம் வழக்கு
- மெக்சிகோவில் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 7 பேர் பலி
விளையாட்டு:
- இந்திய அணிக்கு எதிரான டி-20 போட்டியில் மேற்கிந்திய திவுகள் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
- சென்னையில் தொடங்கியது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் - சீன அணியை 7-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அபாரம்
- தேசிய அளிலான செஸ் தரவரிசைப்பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் சக தமிழக வீரரான குகேஷ்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion