மேலும் அறிய

நான் முதல்வன் திட்டத்தில் வேலை வாய்ப்பு இருக்குங்க... அருமையான சம்பளம்: உடனே அப்ளை பண்ணுங்க

தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகத்தில் கீழ் செயல்படும் நான் முதல்வன் திட்டம் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர்: ரூ.1.5 லட்சம் வரை சம்பளம்; நான் முதல்வன் திட்டத்தில் பணி செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் 126 காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்காங்க. தகுதியானவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க. 

தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகத்தில் கீழ் செயல்படும் நான் முதல்வன் திட்டம் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஏராளமான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

காலிப்பணியிடங்கள்

இணை துணைத் தலைவர் 3
ப்ரோகிராம் மேனேஜர் 21
சீனியர் அசோசியேட் 8
ஜோனல் கணக்கு மேனேஜர் 5
திட்ட அசோசியேட் 35
ஜூனியர் அசோசியேட் 1
இளம் வல்லுநர் 16
ப்ரோகிராம் நிர்வாகி 38
மொத்தம் 126

வயது வரம்பு

இப்பணியிடங்களுக்கு 31.07.2025 தேதியின்படி, இணை துணைத் தலைவர் பதவிக்கு அதிகப்படியாக 50 வயது வரை இருக்கலாம்.

ப்ரோகிராம் மேனேஜர் பதவிக்கு 45 வயது வரை இருக்கலாம். சீனியர் அசோசியேட், ஜோனல் கணக்கு மேனேஜர், திட்ட அசோசியேட் பதவிக்கு 40 வயது வரை இருக்கலாம். ஜூனியர் அசோசியேட், இளம் வல்லுநர் பதவிக்கு அதிகபடியாக 35 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி

இணை துணைத் தலைவர் பதவிக்கு பி.இ/ பி.டெக், எம்பிஏ, காட்சித் தொடர்பு / இதழியல் / ஊடகம் / சந்தைப்படுத்தல் அல்லது இதற்கு தொடர்புடைய முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 7 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் தேவை. ப்ரோகிராம் மேனேஜர் பதவிக்கு எம்பிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சீனியர் அசோசியேட் பதவிக்கு பொறியியல், ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு, எம்பிஏ, மீடியா சார்ந்த படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் தேவை.
ஜோனல் கணக்கு மேனேஜர் பதவிக்கு பொறியியல் படிப்புடன் 3 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் தேவை.

திட்ட அசோசியேட் பதவிக்கு பொறியியல் அல்லது எம்பிஏ அல்லது ஏதேனும் ஒரு முதுகலை பட்டப்படிப்பு ஆகியவை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், 4 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் தேவை.

ஜூனியர் அசோசியேட் பதவிக்கு பொறியியல் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பபை முடித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் அனுபவம் தேவை. இளம் வல்லுநர் பதவிக்கு பொறியியல், கணினி அறிவியல் அல்லது ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 1 ஆண்டு மேலான அனுபவம் தேவை.

ப்ரோகிராம் நிர்வாகி பதவிக்கு எம்பிஏ அல்லது தொடர்புடைய முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இணை துணைத் தலைவர் பதவிக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். ப்ரோகிராம் மேனேஜர் பதவிக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். சீனியர் அசோசியேட் பதவிக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். ஜோனல் கணக்கு மேனேஜர் பதவிக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். திட்ட அசோசியேட் பதவிக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். ஜூனியர் அசோசியேட் பதவிக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இளம் வல்லுநர் பதவிக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். ப்ரோகிராம் நிர்வாகி பதவிக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.

https://naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. ஒருவர் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதார்கள் புகைப்படம், கையொப்பம், அடையாள அட்டை, வீட்டு முகவரி, கவ்லித்தகுதி சான்றிதழ் மற்றும் அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் 11 மாத கால அளவில் ஒப்பந்த முறை பணியமர்த்தப்படுவார்கள். தேவையின் அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும்.

தலைப்பு செய்திகள்

242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
Embed widget