மேலும் அறிய

திமுகவில் கோஷ்டி பூசல்! மாநகராட்சி கூட்டத்தில் மோதல்! KN நேரு Vs அன்பில்! | Anbil Mahesh Vs KN Nehru

திருச்சியில் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் மூத்த அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளரான திமுக கவுன்சிலர் கொண்டு வந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மற்றொரு அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஆதரவு துணைமேயர் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவினர் இடையே மீண்டும் கோஷ்டி மோதல் வெடித்துள்ளது. 

நேற்று மேயர் அன்பழகன் தலைமையில் மாநகராட்சி கவுன்சில் கூட்டம் கூடியது. அப்போது, அரியமங்கலம் குப்பை கிடங்கில் கோழிக்கழிவு மறுசுழற்சி ஆலை அமைப்பதற்கான டெண்டர் வெளியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, நிலத்தடி நீரைப் பாதிக்கும் வகையில் கோழிக்கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவதைத் தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என். நேருவின் ஒப்புதலுடன் இந்தத் திட்டம் தயாராகி வருவதாகவும், புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டதாகவும் மேயர் விளக்கமளித்தார். 

உடனடியாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மண்டலத் தலைவரும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தீவிர ஆதரவாளருமான எம்.மதிவாணன், அரியமங்கலத்தில் உள்ள குப்பை மேட்டை மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர். அவர்களின் எதிர்ப்பையும் மீறி, நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் சுத்திகரிப்பு கிணறுகள், நாய் கருத்தடை மையங்கள் மற்றும் கோழிக்கழிவு மறுசுழற்சி ஆலைகளை நிறுவியுள்ளது. இது அப்பகுதியை மேலும் பாதிக்கும். ஏற்கனவே அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்பாளர்கள் அமைச்சர் அன்பில் மகேஷை அணுகி திட்டத்தை திரும்பப் பெறக்கோரியுள்ளனர் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிவாணன் வெளிநடப்பு செய்ய உத்தரவிட, அவரை பின்தொடர்ந்து துணை மேயர் திவ்யா, மற்றொரு மண்டல தலைவர் ஜெயநிர்மலா மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆதரவு கவுன்சிலர்கள், அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். மேயர் அன்பழகன் இந்தத் திட்டம் குறித்து விளக்கி இது பாதுகாப்பானது என்றும், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். நகர சுகாதார அதிகாரி டாக்டர் விஜய் சந்திரனை, இதுகுறித்து அனைவருக்கும் விளக்குமாறு வலியுறுத்தினார்.

அதன்படி, விஜய் சந்திரன் பேசுகையில், மாநகராட்சி பகுதியில் 25 டன் எடையிலான மீன் மற்றும் கோழி கழிவுகள் உருவாகின்றன. அவை நீர் நிலைகளிலும், சாலையோரங்களிலும் கொட்டப்படுவதால் மக்களுக்கு சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க, மறுசுழற்சி ஆலை திட்டமிடப்பட்டது. இந்த ஆலை நவீன தொழில்நுட்பத்துடன் இயக்கப்படும். கழிவுகளை மீன் தீவனமாக மறுசுழற்சி செய்யும். இந்த ஆலைகள் மூலம் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதை சோதனைகள் நிரூபித்துள்ளன என விளக்கமளித்தார். தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய மேயர் அன்பழகன், இந்தத் திட்டம் கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.

திருச்சியில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்பதில் திமுக அமைச்சர்களான கே.என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதன் தொடர்ச்சியாகவே, மாநகராட்சி கவுன்சில் கூட்டத்திலும் அமைச்சர்களின் ஆதரவு கவுன்சிலர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சொந்த கட்சி மேயருக்கு எதிராகவே, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மட்டுமின்றி பல மாவட்டங்களிலும், திமுகவின் மூத்த மற்றும் இளம் தலைவர்கள் இடையே உட்கட்சி மோதல் நிலவுவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், திமுகவில் நிலவும் உட்கட்சி மோதல் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget