மேலும் அறிய
Advertisement
Today Headlines: ஒரு நிமிடத்தில் உள்ளூர் முதல் உலகம் வரையிலான நிகழ்வுகள்.. காலை தலைப்பு செய்திகள் இதோ..!
Today Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க என்.எல்.சி. நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்
- மகாராஷ்ராவில் கிரேன் விபத்தில் 2 தமிழர்கள் உயிரிழப்பு - ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
- டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- கன்னியாகுமரியைச் சேர்ந்த முதல் பெண் மேஜர் ஜெனரலாக இக்னேஷியஸ் பதவி உயர்வு - பாராட்டி முதல்வர் பதிவிட்ட ட்வீட்டை நீக்கிய இந்திய ராணுவம்
- ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம் - தமிழ்நாடு முழுவதும் பூக்களின் விலை கடும் உயர்வு
- ஓபிசி உள் இட ஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
- ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி மீது காரைக்குடியைச் சேர்ந்த பெண் பாலியல் புகார் - அரசியலில் வட்டாரத்தில் பரபரப்பு
இந்தியா:
- நாடு முழுவதும் 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை என பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு
- பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வர நான் உத்தரவிட முடியாது - மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் திட்டவட்டம்
- அவை கண்ணியத்தை காக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்படும் வரை நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் - சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு
- தக்காளி உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் மழை எதிரொலி - டெல்லியில் ஒரு கிலோ தக்காளி ரூ.260க்கு விற்பனை
- சந்திரயான், ககன்யான் திட்டங்களின் வெற்றிக்கு பெண் விஞ்ஞானிகள் முக்கிய பங்காற்றியுள்ளனர் - பிரதமர் மோடி பாராட்டு
- அவதூறு வழக்கில் சிறை தண்டனை - தீர்ப்பை நிறுத்தி வைக்க ராகுல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் விளக்க மனு சமர்பிப்பு
- தடையில்லாத சுங்க வசூல் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் - மத்திய அமைச்சர் வி.கே.சிங் தகவல்
- மத்திய ஆயுத படைகள் மற்றும் டெல்லி போலீசில் 1.14 லட்சம் காலியிடங்கள் இருப்பதால் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
உலகம்:
- செனட் கூட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்போவதாக மிரட்டல் - அமெரிக்காவில் உச்சக்கட்ட பாதுகாப்பு
- அமெரிக்கா புலனாய்வு முகமையின் உயர் பொறுப்பில் இந்திய வம்சாவளி பெண் ஷோஹினி சின்ஹா நியமனம்
- இத்தாலியில் ரஷ்ய ஹேக்கர்கள் கைவரிசை - வங்கி சேவைகள் முடக்கத்தால் பொதுமக்கள் அவதி
- பிரேசிலின் சாவோ பவுலோ நகரத்தில் 13 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொலை
- ஊழல் புகாரில் கைது செய்து விசாரணை - சிங்கப்பூர் அமைச்சரவையில் இருந்து இந்திய வம்சாவளி அமைச்சர் ஈஸ்வரன் இடைநீக்கம்
- சிலியில் ஹெலிகாப்டர் வெடித்து 5 விமானப்படை வீரர்கள் பலி
- 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் சீனாவில் கனமழை - இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
விளையாட்டு:
- இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி தரோபாவில் இன்று நடக்கிறது
- இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் இன்று தொடக்கம்
- பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடர் : பிரேசில் அணி வெளியேற்றம்
- உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்ய பாகிஸ்தான் அணி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்
- ஆஷஸ் தொடரில் தாமதமாக பந்து வீச்சு எதிரொலி - சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion