மேலும் அறிய
Advertisement
Today Headlines: நேற்றைய நாளில் நடந்தது.. இன்றைய நாளில் நடக்கப்போவது... உங்களுக்காக காலை தலைப்பு செய்திகள்!
Today Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாடு முழுவதும் 500 ரேஷன் கடைகளில் தக்காளி ரூ.60 க்கு விற்பனை: பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து வாங்கி சென்றனர்.
- கொலை, கொள்ளை நடந்ததாக கூறப்படும் கொடநாடு பங்களா ஜெயலலிதாவுக்கு சொந்தமானது அல்ல- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி
- நிவாரண முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு உதவும் வகையில் ரூ. 10 கோடிக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க ஒப்புதல் வழங்க வேண்டும் : மணிப்பூர் முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை நாட்டு மக்களுக்கு அடையாள காட்டவே ஆர்ப்பாட்டம் - ஓபிஎஸ் பேச்சு
- இத்தாலியின் வெனீசு நகரத்திற்கு அருகே உள்ள தீவு ஒன்றில் தமிழ் ஓலைச்சுவடிகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளன.
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செப்டம்பர் 17ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கவுள்ளார்.
- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சென்னை மெட்ரோ ரயில்களில் நடப்பாண்டில் கடந்த 6 மாதங்களை விட ஜூலை மாதத்தில் மட்டும் 8.46 லட்சம் பயணிகள் அதிகம் பயணித்துள்ளனர்.
- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு 'தகைசால் விருது’ - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
இந்தியா:
- மகாராஷ்டிராவில் பாலம் கட்டுமான பணியின்போது கிரேன் விழுந்து விபத்து; 2 தமிழர்கள் உட்பட 20 பேர் தொழிலாளர்கள் உயிரிழப்பு
- மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 8ம் தேதி விவாதம்; மக்களவையில் ஆகஸ்ட் 10ம் தேதி பிரதமர் மோடி பதில்
- மக்களவையில் கடும் எதிர்ப்புக்கு இடையே டெல்லி சேவைகள் மசோதா தாக்கல்: மாநில அரசு அதிகாரத்தில் அத்துமீறும் செயல் என காங்கிரஸ் குற்றச்சாட்டு
- 2000 ரூபாய் நோட்டுகளில் ரூ. 42 ஆயிரம் கோடிதான் இன்னும் வர வேண்டும் - 88% வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு
- மணிப்பூர் வன்முறை தொடர்பாக இதுவரை 6,532 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
- லாலு மற்றும் குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்க இயக்குனரகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
- வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிப்பெற்று, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என என்.டி.ஏ கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலகம்:
- அமெரிக்காவில் பிளாஸ்டிக்கை பயன்படுத்த கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
- ஜப்பானில் கானுன் புயல் எதிரொலி: 500-க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து
- தங்கள் மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் - அமெரிக்காவுக்கு ஆப்கானிஸ்தான் நிதியமைச்சர் ஆமீர்கான் வேண்டுகோள்
விளையாட்டு:
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி.
- இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டனாக ரோமன் பவெல் நியமனம்.
- சென்னையில் நடைபெறும் ஆசியன் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் மற்றும் சீன ஆடவர் ஹாக்கி அணிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
- ஆசிய விளையாட்டுக்கான இந்திய கால்பந்து அணி அறிவிப்பு: தமிழக வீரர் சிவசக்திக்கு இடம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion