மேலும் அறிய

2024 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

(Source:  ABP CVoter)
×
Top
Bottom

BJP BJD Alliance: முடிவாவதற்கு முன்பே முடிவுக்கு வந்த கூட்டணி! பா.ஜ.க.வுக்கு அல்வா கொடுத்த நவீன் பட்நாயக்?

BJP BJD Alliance: அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்ல முடியாத வகையில் பிஜு ஜனதா தளம், பாஜகவுக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் சிக்கல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், தனது கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ் குமார், I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.

அதன் தொடர்ச்சியாக, உத்தர பிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தள் கட்சியும் I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்தது. வட மாநிலங்களைத் தொடர்ந்து, நாட்டின் பிற பகுதிகளில் கூட்டணியை பலப்படுத்த பாஜக தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது.

பா.ஜ.க.வுக்கு அல்வா கொடுத்த நவீன் பட்நாயக்?

அந்த வகையில், ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம், ஜன சேனா கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகின. இதற்காக, இரு கட்சிகளின் தலைமையும் தங்கள் மூத்த தலைவர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்ல முடியாத வகையில் பிஜு ஜனதா தளம், பா.ஜ.க.வுக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் சிக்கல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது என ஒடிசா மாநில பாஜக தலைவர்கள் இருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து தனக்கு எந்த தகவலும் தெரியாது என ஒடிசா மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமல் தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, அதே பாணியில் பதில் அளித்த ஒடிசா மாநில இணை பொறுப்பாளர் விஜய்பால் சிங் தோமர், "எங்களுக்குத் தெரிந்தவரை, தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட தயாராகி வருகிறோம். 

முடிவாவதற்கு முன்பே முடிவுக்கு வந்த கூட்டணி:

கூட்டணி என வந்தால் எங்களைதான் முதலில் ஆலோசிப்பார்கள். தற்போது, ​​அது போன்ற எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அனைத்து இடங்களிலும் தேர்தல் நடத்துவது குறித்து டெல்லியில் மாநிலத் தலைமையுடன் நாங்கள் விவாதித்தோம். ஒடிசாவில் 147 தொகுதிகளில் 89க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்று நாங்கள் நம்புகிறோம். 16 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்" என்றார்.

கூட்டணி பேச்சுவார்த்தை எந்த நிலையில் இருக்கிறது என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஒடிசா மாநில இணை பொறுப்பாளர், "அது தொடர்பான எந்த தகவலும் எனக்கு தெரியாது. கூட்டணி குறித்து செய்தி வெளியிடுபவர்களிடம் இதை கேளுங்கள்" என்றார்.

பிஜு ஜனதா தள கட்சியை சேர்ந்த 2 தலைவர்கள், டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. அதேபோல, கூட்டணியின் நன்மை தீமைகள் பற்றி பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் உடன் அதன் மூத்த தலைவர்கள் அவரின் வீட்டில் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர முடியாத சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மற்ற இடங்களில் வெப்பநிலை எப்படி?
இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மற்ற இடங்களில் வெப்பநிலை எப்படி?
Garudan Box Office Collection: அதிக வசூல் ஈட்டிய படங்களில் மூன்றாவது இடம் ...எகிறும் கருடன் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!
Garudan Box Office Collection: அதிக வசூல் ஈட்டிய படங்களில் மூன்றாவது இடம் ...எகிறும் கருடன் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!
EPS: முத்துமலை முருகன் கோயிலில் சுவாமி தரிசனம்! பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய எடப்பாடி பழனிசாமி
EPS: முத்துமலை முருகன் கோயிலில் சுவாமி தரிசனம்! பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய எடப்பாடி பழனிசாமி
Sarathkumar: தேர்தலில் மனைவி வெற்றிக்காக  அங்கப்பிரதட்சணம் செய்த நடிகர் சரத்குமார்
தேர்தலில் மனைவி வெற்றிக்காக அங்கப்பிரதட்சணம் செய்த நடிகர் சரத்குமார்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Rahul in Kalaingnar Memorial | கலைஞருக்காக வந்த ராகுல்..பூரித்து போன சோனியா!MK Stalin at Kalaignar memorial | கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின்! படையெடுத்து வந்த அமைச்சர்கள்DMK PMK Clash | Kalaignar Birthday | தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தி! கலைஞரின் அரசியல் வல்லமை! 101வது பிறந்தநாள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மற்ற இடங்களில் வெப்பநிலை எப்படி?
இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மற்ற இடங்களில் வெப்பநிலை எப்படி?
Garudan Box Office Collection: அதிக வசூல் ஈட்டிய படங்களில் மூன்றாவது இடம் ...எகிறும் கருடன் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!
Garudan Box Office Collection: அதிக வசூல் ஈட்டிய படங்களில் மூன்றாவது இடம் ...எகிறும் கருடன் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!
EPS: முத்துமலை முருகன் கோயிலில் சுவாமி தரிசனம்! பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய எடப்பாடி பழனிசாமி
EPS: முத்துமலை முருகன் கோயிலில் சுவாமி தரிசனம்! பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய எடப்பாடி பழனிசாமி
Sarathkumar: தேர்தலில் மனைவி வெற்றிக்காக  அங்கப்பிரதட்சணம் செய்த நடிகர் சரத்குமார்
தேர்தலில் மனைவி வெற்றிக்காக அங்கப்பிரதட்சணம் செய்த நடிகர் சரத்குமார்
Vadakkan Movie: டைட்டிலுக்கு சென்சார் போர்டு எதிர்ப்பு.. வடக்கன் படத்தின் பெயரை மாற்றிய படக்குழு!
டைட்டிலுக்கு சென்சார் போர்டு எதிர்ப்பு.. வடக்கன் படத்தின் பெயரை மாற்றிய படக்குழு!
Lok Sabha Election 2024 Result: பாஜகவின் மோசடியை நியாயப்படுத்தவே சாதகமான கருத்துக் கணிப்புகள்: நிதியமைச்சரின் கணவர் காட்டம்
பாஜகவின் மோசடியை நியாயப்படுத்தவே சாதகமான கருத்துக் கணிப்புகள் : நிதியமைச்சரின் கணவர் காட்டம்
HBD Kalaignar Karunanidhi: தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத தலைப்புச் செய்தி.. பேனாவால் காத்த கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்.
தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத தலைப்புச் செய்தி.. பேனாவால் காத்த கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்.
TNEA Admission 2024: இன்னும் சில நாட்கள்தான்; பொறியியல் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
TNEA Admission 2024: இன்னும் சில நாட்கள்தான்; பொறியியல் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Embed widget