மேலும் அறிய

Pope Francis: புரட்சிக்கு பெயர்போன போப் பிரான்சிஸ்.. அப்படி என்ன செய்தார்.?

மறைந்த போப் பிரான்சிஸ் பாரம்பரியத்தை தாண்டி, ஒரு புரட்சிகரமான போப்பாண்டவராக இருந்துள்ளார். தனது பதவிக்காலத்தில், தேவாலயத்தின் தன்மைகளையே மாற்றியமைத்த பெருமைக்குரியவராக கருதப்படுகிறார்.

கத்தோலிக்க திருச்சபையின் போப்பாக இருந்த போப் பிரான்சிஸ் காலமானதையடுத்து, வாட்டிகனில் அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலத்தி வருகின்றனர். தனது பதவிக் காலத்தின்போது, பாரம்பரியத்தை பின்பற்றியதோடு, ஒரு புரட்சிகரமான போப்பாகவும் வலம் வந்துள்ளார் போப் பிரான்சிஸ். அப்படி என்ன செய்தார் அவர்.? பார்க்கலாம்...

எளிமையாகவும், புரட்சிகரமாகவும் இருந்த போப் பிரான்சிஸ்

போப் பிரான்சிஸ், லத்தீன் அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப்பாண்டவராக இருந்தார். அதுமட்டுமல்லாமல், புனித பீட்டரின் அரியணைக்கு தேர்வான முதல் இயேசு சபையினரும் இவராகவே இருந்தார். நீண்ட காலமாக, ரோமில் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் போப்பாக இருந்ததில்லை. வரலாற்று ரீதியாகவே ரோமாபுரியினரால், இயேசு சபையினர் சந்தேகத்துடனேயே பார்க்கப்பட்டு வந்தனர்.

புதிய போப்பாண்டவர் இளையவராக இருப்பார் என கத்தோலிக்கர்கள் கருதிய நிலையில், அர்ஜென்டினாவின் கார்டினர் பெர்கோக்லியோ, அதாவது போப் பிராசிஸ், 2013-ல் தேர்வானபோது, 70-களில் இருந்தார். இப்படி, பதவியேற்றபோதே பல புரட்சிகளை செய்தவர், கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்துவதிலும் புரட்சியை கடைபிடித்தார்.

பாலியல் விஷயங்களில் மரபுவழி கருத்துக்களை கொண்ட பழைமைவாதிகளை ஈர்த்த அதே வேளையில், சமூக நீதி குறித்த தனது தாளாரவாத நிலைப்பாட்டால், சீர்திருத்தவாதிகளையும் ஈர்த்தார். இதனால், இவரது வழக்கத்திற்கு மாறான பின்னணி, வாட்டிகனை புத்துயிர் பெறச் செய்யும் என நம்பப்பட்டது. ஆனாலும், பிராசிஸின் சீர்திருத்த முயற்சிகள் எதிர்ப்பையும் சந்தித்தன.

தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே வித்தியாசமாக செயல்பட்ட அவர், கார்டினல்களை சிம்மாசனத்தில் அமர்ந்தபடி வரவேற்காமல், நின்று வரவேற்றார். வெள்ளை நிற உடை அணிந்த அவர், 13-ம் நூற்றாண்டின் போதகரும், விலங்கு பிரியருமான புனித பிரான்சிஸ் ஆஃப் அதிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, முதலாம் போப் பிரான்சிஸ் என்ற புதிய பெயரை தாங்கினார். வாட்டிகனின் பால்கனிக்கு வந்து மக்களை சந்திக்கும் வழக்கத்தையும் அவர் கடைபிடித்தார்.

அதிகாரத்தையும், ஆடம்பரத்தையும் விட, பணியை விரும்பி செய்வதில் அவர் உறுதியாக இருந்தார். அவருக்கு வழங்கப்பட்ட விலை உயர்ந்த லிமோசின் காரை தவிர்த்து, மற்ற கார்டினல்களை அழைத்துச் செல்லும் பேருந்திலேயே பயணம் செய்தார்.

முன்னதாக, அவரை போப்பாக தேர்ந்தெடுப்பதற்கான போப்பாண்டவர் மாநாட்டின்போதே, வாட்டிகனில் அவர் தங்கிய ஹோட்டலின் பில்லை அவரே செலுத்தியுள்ளார். பின்னர், போப்புகளுக்கு வழங்கப்படும் சொகுசு இல்லத்தில் தங்காமல், ஒரு கெஸ்ட் ஹவுசிலேயே அவர் தங்கியிருந்துள்ளார்.

ஓரினச் சேர்க்கையாளர்கள் கடவுனி குழந்தைகள் என கூறிய அவர், அவர்களுக்கும் வாழ உரிமை உள்ளது என்று புரட்சிகரமான கருத்தை பதிவு செய்தார். ஆதரவற்றோரையும், உதவி தேவைப்படுவோரையும் துரத்துபவர்கள் தங்களை கிறிஸ்தவர் என்று கூறுவது பாசாங்குத்தனமானது என்றும் கூறினார். ஆண் மற்றும் பெண் சமமானவர்கள் என்றும், பெண்களுக்கு சமமான அளவில் பொறுப்புகளை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்படி, தான் இருந்த காலத்தில், கிறிஸ்தவத்தையும் தாண்டி, மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பவராகவும், சமூக, அரசியல் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பவராகவும், பல்வேறு புரட்சிகளை அரங்கேற்றி, உலகம் முழுவதிலும் பிரபலமான ஒரு போப்பாண்டவராக இருந்துவந்தார் போப் பிரான்சிஸ். அவரது மறைவு, கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கே ஒரு இழப்பு என்று கூறினால், அது மிகையாகாது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Porur Vadapalani Metro: பிப்ரவரி முதல் வடபழனி - போரூர் மெட்ரோ ரயில் சேவை - பூந்தமல்லிக்கு எப்போது? முக்கிய அறிவிப்பு
Porur Vadapalani Metro: பிப்ரவரி முதல் வடபழனி - போரூர் மெட்ரோ ரயில் சேவை - பூந்தமல்லிக்கு எப்போது? முக்கிய அறிவிப்பு
TVK Vijay: தொடர் மௌனம்.. டெல்லியில் சிபிஐ முன் வாயை திறக்கும் விஜய் - சிக்கப்போவது யார்?
TVK Vijay: தொடர் மௌனம்.. டெல்லியில் சிபிஐ முன் வாயை திறக்கும் விஜய் - சிக்கப்போவது யார்?
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
IND vs NZ: கோலி மாஸ்.. கே.எல்.ராகுல் கிளாஸ். 2026ஐ வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!
IND vs NZ: கோலி மாஸ்.. கே.எல்.ராகுல் கிளாஸ். 2026ஐ வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!
ABP Premium

வீடியோ

Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு
Mamata banerjee on Amitshah | ”சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்! என்கிட்ட PEN DRIVE இருக்கு” அமித்ஷாவை மிரட்டும் மம்தா
Owaisi vs BJP | ’’முஸ்லிம் பெண் பிரதமாராவார்’’பற்ற வைத்த ஓவைசிகொதிக்கும் பாஜகவினர்
Vijay CBI Enquiry | ‘WITNESS’ to ‘SUSPECT’ !CBI விசாரணையில் TWIST?சிக்கலில் விஜய்?
Pongal Celebration |''பொங்கலோ பொங்கல்’’சமத்துவ பொங்கல் விழா களைகட்டிய தர்மபுரி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Porur Vadapalani Metro: பிப்ரவரி முதல் வடபழனி - போரூர் மெட்ரோ ரயில் சேவை - பூந்தமல்லிக்கு எப்போது? முக்கிய அறிவிப்பு
Porur Vadapalani Metro: பிப்ரவரி முதல் வடபழனி - போரூர் மெட்ரோ ரயில் சேவை - பூந்தமல்லிக்கு எப்போது? முக்கிய அறிவிப்பு
TVK Vijay: தொடர் மௌனம்.. டெல்லியில் சிபிஐ முன் வாயை திறக்கும் விஜய் - சிக்கப்போவது யார்?
TVK Vijay: தொடர் மௌனம்.. டெல்லியில் சிபிஐ முன் வாயை திறக்கும் விஜய் - சிக்கப்போவது யார்?
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
IND vs NZ: கோலி மாஸ்.. கே.எல்.ராகுல் கிளாஸ். 2026ஐ வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!
IND vs NZ: கோலி மாஸ்.. கே.எல்.ராகுல் கிளாஸ். 2026ஐ வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!
Pongal 2026: காலியாகும் சென்னை.. இரண்டே நாளில் 2.50 லட்சம் பேர் ஜுட்! ஹவுஸ்ஃபுல்லாக போகும் பஸ், ரயில்!
Pongal 2026: காலியாகும் சென்னை.. இரண்டே நாளில் 2.50 லட்சம் பேர் ஜுட்! ஹவுஸ்ஃபுல்லாக போகும் பஸ், ரயில்!
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
Madurai ; வைகோவின் 'சமத்துவ நடைபயணம்': துரை வைகோ கண் கலங்க, பாஜகவை எச்சரித்த வைகோ!
Madurai ; வைகோவின் 'சமத்துவ நடைபயணம்': துரை வைகோ கண் கலங்க, பாஜகவை எச்சரித்த வைகோ!
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
Embed widget