Priyanka Deshpande Husband : இலங்கை அரசியல் குடும்பத்தில் மருமகளான VJ பிரியங்கா! வசி யார் தெரியுமா?
பிரபல விஜய் டிவி ஆங்கரான பிரியங்கா தேஷ்பாண்டே சில தினங்களுக்கு முன்னாடி வசி என்பவரை இரண்டாம் திருமணம் செஞ்சு கொண்டாங்க. இந்த தம்பதியோட திருமண புகைப்படங்கள் தான் இணையத்துல வைரலாகிட்டு வர நிலையில பிரியங்காவோட கணவர் டிஜே வசி அரசியல் பின்புலம் கொண்டவர் என தகவல் வெளியாகி இருக்கு..
விஜய் டிவியின் சென்சேஷனல் ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே.. விஜய் டிவி ல ஒளிபரப்பாகுற பல நிகழ்ச்சிகளை இவங்க தொகுத்து வழங்கிட்டு வராங்க. இந்நிலையில சில வருடங்களுக்கு முன்னாடி விஜய் டிவில பணியாற்றிய பிரவீன் என்பவரை பிரியங்கா காதலித்து திருமணம் செஞ்சு கொண்டாங்க. ஆனால் இந்த திருமண வாழ்க்கை அவங்களோட தனிப்பட்ட காரனங்கள்னால் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தான் சிங்கிளா வாழ்ந்துட்டு வந்த பிரியங்கா அவங்களோட நண்பரான டிஜே வசிய திருமணம் செஞ்சிருக்காங்க.
பிரியங்காவின் கணவர் வசி சீரியல் தயாரிப்பாளர், டி.ஜே. ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி நடத்தி வருகிறவர் நு இணையத்தில் பல தகவல்கள் வெளியான நிலையில அவர் ஒரு அரசியல் பின்புலம் கொண்டவர் அப்டிங்கற தகவல் தற்போது வெளியாகி இருக்கு. வசி ஒரு ஈழத்தமிழர். இவருடைய குடும்பம் இலங்கை திரிகோணமலையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இலங்கை வாழ் தமிழர்களிடையே ஆதரவைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்தவரும் இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவருமான மறைந்த இரா.சம்பந்தனின் தங்கையின் மகன் தான் பிரியங்காவின் கணவர் டிஜே வசி. இலங்கையில் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி நடத்தி வந்திருக்கிறார். பொதுவாக நம் நாட்டு பிரபலங்கள் இலங்கைக்கு நிகழ்ச்சிகளுக்காக சென்று வருவது வழக்கம். அப்படிதான் பிரியங்காவுக்கும் வசிக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாகவும் அந்த நட்பு காதலா மாறி தற்போது திருமனத்துல முடிஞ்சுருக்கு.





















