பொய் சொல்லி 2 -வது திருமணம் ரூ.18.5 லட்சம் அபேஸ் ஆட்டையை போட்ட சீரியல் நடிகை
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, பொன்னி, ஆனந்த ராகம் போன்ற ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமான ரிஹானா, 2ஆவது திருமணம் செய்து, பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சக்திவேலுவிற்கு மனைவியாக மாரி என்ற ரோலில் முதலில் நடித்தவர் தான் ரிஹானா. சமீப காலமாகவே சர்ச்சையான விஷயங்களை பேசி... பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரிஹானா உடல்நல பிரச்சனை காரணமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சீரியலை தாண்டி, யூடியூப் சேனல்களில் சீரியல் நடிகர், நடிகைகள் இல்லற வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனை குறித்து வாண்டடாக பேசி சர்ச்சையில் சிக்குவதையும் வழக்கமாக வைத்திருந்தார். இதற்க்கு முன் அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் திருமண சர்ச்சை, மற்றும் சம்யுக்தா - விஷ்ணுகாந்த போன்ற சீரியல் நடிகர்கள் விவாகரத்து பற்றி இவர் பேசி கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான், ராஜ் கண்ணன் என்பவர் ரிஹானா... தன்னை திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி, சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது, 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை ரிஹானா பேகம் தன்னுடைய நண்பர் மூலம் தனக்கு அறிமுகமானார். அவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்று விட்டதாக கூறியதாகவும், 2 குழந்தைகள் மற்றும் தன்னுடைய தாயாருடன் தனியாக வசித்து வருவதாக கூறினார்.
ஒருமுறை அவர் என்னை வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது அவரின் அம்மா, என் கையை பிடித்து கொண்டு தன்னுடைய மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கெஞ்சினார். ஒரு கட்டத்தில் நானும் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். அதன்படி சமீபத்தில் எங்களுடைய திருமணம் எனது நண்பர் வீட்டில் மிகவும் எளிமையான முறையில் இந்து முறைப்படி நடந்து முடிந்தது.
திருமணத்திற்கு பின்னர், அவருடன் ஒன்றாக வாழ இனி நீங்கள் தனியாக இருக்கவேண்டாம். உன் அம்மா மற்றும் பிள்ளைகளுடன் பூந்தமல்லியில் உள்ள என்னுடைய வீட்டிற்கு வர வேண்டும் என கூறினேன். அதற்க்கு ரிஹானா... நான் ஒரு நடிகை என்பதால் என்னை பார்க்க சிலர் வீட்டுக்கு வருவார்கள். அவர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அதையெல்லாம் நீங்கள் கண்டும் காணாமல் தான் இருக்க வேண்டும். அதே போல் நான் உங்களுடைய வீட்டிற்கு வர முடியாது என கூறினாராம்.
மேலும் ரிஹானா முதல் கணவரிடம் இருந்து இன்னும் விவாகரத்து பெறவில்லை என்பதும் எனக்கு திருமணத்திற்கு பிறகே தெரியவந்தது. விவாகரத்து பெற்றதாக கூறி தன்னை திருமணம் செய்து ஏமாற்றியது மட்டும் இன்றி... தன்னிடம் இருந்து ரூ. 18 லட்சத்திற்கு மேல் ரிஹானா பெற்றுள்ளதாகவும், அதற்கான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகவும் கூறி தற்போது தன்னுடைய புகார் மனுவில் கூறியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் ராஜ் மன்னம் மற்றும் ரிஹானா பேகம் ஆகியோரை விசாரணை செய்ய பூந்தமல்லி போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சீரியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.





















