Yogi Adityanath Vs Modi: பிரதமராகும் யோகி ஆதித்யநாத்?மோடிக்கு செக் வைக்கும் RSS பக்கா ப்ளான் | BJP
மோடியை ஓரங்கட்டிவிட்டு யோகி ஆதித்யநாத்தை பிரதமராக்குவதற்கான வேலைகளில் RSS இறங்கியுள்ளதாக பரபரப்பு பேச்சு அடிபடுகிறது. கும்பமேளாவின் போதே யோகி ஆதித்யநாத்தை பிரதமராக அறிவிக்க இருந்தாக சொல்லி அகிலேஷ் யாதவ் பேசியிருப்பது புயலைக் கிளப்பியுள்ளது.
பிரதமராக மோடி பொறுப்பேற்றதில் இருந்தே பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-க்கும் மோடிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்பட்டது. ஆர் எஸ் எஸ்-ஐ மீறி பாஜகவை மோடி கண்ட்ரோலில் எடுப்பதை அவர்கள் விரும்பவில்லை.
பாஜகவின் By law படி 75 வயதை கடந்த ஒருவர் கட்சி அல்லது ஆட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்க முடியது என்பதை கருத்தில் கொண்டு அந்தவகையில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் ஓய்வை அறிவித்தனர். எடியூரப்பா கர்நாடக முதலமைச்சர் ஆனதை சுட்டிக்காட்டி, இதில் விதிவிலக்கும் இருப்பதாக பாஜக தரப்பில் இருந்தே பதிலும் வருகிறது. எல்.கே.அத்வானி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் 75 வயதுக்கு பிறகு மார்க்தர்ஷன் மண்டல் என்ற குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக இந்த குழு அமைக்கப்பட்டது. செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் மோடிக்கு 75வது பிறந்தநாள் என்பதால் அவர் பிரதமர் பதவியில் இருந்து இறங்கிறாரா என்ற விவாதம் சூடுபிடித்தது.
இந்த நேரத்தில் சமீபத்தில் ஆர் எஸ் எஸ் அலுவலகம் சென்று வந்தார் மோடி. பிரதமர் ஆன பிறகு முதல்முறையாக அவர் 14 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு சென்றதால் ஓய்வை அறிவிக்கப் போகிறாரா மோடி என எதிர்க்கட்சிகள் பற்றவைத்தன. இச்சூழலில் தான் உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளாவின் போதே மோடியை பிரதமர் பொறுப்பில் இருந்து அகற்றி விட்டு இந்தியாவின் அடுத்த பிரதமராக உத்தரப்பிரதேச முதலமைச்சஎ யோகி ஆதித்யநாத்தை அறிவிக்க பேச்சுவார்த்தை நடபெற்றது என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார். பிரதமர் ரேஸில் யோகி ஆதித்யநாத் தான் RSS-ன் சாய்ஸாக இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது. மோடி போல் இல்லாமல் யோகி ஆதித்யநாத் தான் தங்கள் கைகளுக்குள் இருப்பார் என்பதால் இந்த பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக பேசிய அகிலேஷ் யாதவ்,”கும்பமேளாவில் யோகி ஆதித்யநாத்தை பிரதமராக அறிவிக்க இருந்ததாக தகவல்கள் வந்தன. அவர்கள் நடத்தியது மத கும்ப மேளா அல்ல, அரசியல் கும்ப மேளா” என்று கூறியிருந்தார். இருந்தாலும் இந்த ஆட்சியில் பிரதமராக மோடி தான் இருப்பார் என்று பாஜகவினர் சொல்லி வருகின்றனர்.





















