(Source: Poll of Polls)
Annamalai vs EPS : அடுத்தடுத்து ரகசிய மீட்டிங்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்.. அண்ணாமலைக்கு செக்!
அதிமுக - பாஜக கூட்டணியை எப்படியும் பிரித்து விட வேண்டும் என்று அண்ணாமலை ஸ்கெட்ச் போட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இபிஎஸ் 2026 தேர்தல் மற்றும் கூட்டணிகணக்கை கருத்தில் கொண்டு ரகசிய மீட்டிங்குகளை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்தவகையில், ஆளும் திமுகவிற்கு எதிராக பாஜக உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. அதேபோல், தற்போது இருக்கும் இதே கூட்டணியுடன் 2026 தேர்தலை சந்திக்க திமுகவும் தயாராகிவருகிறது. சீமான் தனித்து போட்டியிடுவதாகவும் பாமகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் இந்த கூட்டணியில் அண்ணாமலைக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு, கடந்த மூன்று ஆண்டுகளில் பாஜகவை தமிழ் நாட்டில் வளர்க்க தான் பல்வேறு போராட்டங்களை நடத்தியதாகவும் இப்போது தான் மக்களிடம் பாஜக என்ற ஒரு கட்சி தமிழ் நாட்டில் இருப்பதே தெரிகிறது எனவும் அண்ணாமலை பாஜக மேலிடத்திடம் சொன்னதாகவும் தகவல் வெளியானது.
சூழல் இப்படி இருக்க இதனை பயன்படுத்திக்கொண்டு பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தான் நமது கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் எனவும் அதிமுக தலைமையில் தேர்தலை எதிர்கொள்வதில் விருப்பம் இல்லாமலும் அண்ணாமலை இருப்பதாகவும் சொல்கின்றனர். அதேபோல், கடந்த காலங்களில் பொன். ராதகிருஷ்ணன், தமிழிசை உள்ளிட்டோர் எல்லாம் இரண்டு முறை தமிழக பாஜக தலைவராக இருந்தனர் ஆனால் தன்னை மீண்டும் தலைவராக்கவிடாமல் இபிஎஸ் தான் தடுத்து விட்டார் எனவும் அவருக்கு எதிராக பல்வேறு திட்டங்களை அண்ணாமலை தீட்டிவருவதாகவும் தகவல் வெளியானது.
இச்சூழலில் தான் இந்த செய்திகள் எல்லாம் இபிஎஸ் காதுகளுக்கு போக, 2026 தேர்தல் மற்றும் கூட்டணிகணக்கை கருத்தில் கொண்டு ரகசிய மீட்டிங்குகளை இபிஎஸ் மேற்கொண்டுவருவதாக கூறப்படுகிறது. அதில், பாஜக கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கலாம இல்லை கடந்த நாடளுமன்ற தேர்தலின் போது கூட்டணியை விட்டு வெளியேறியது போல் வெளியேறிவிடலாமா என்றும் பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது.
அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலருக்கு பாஜக உடனான கூட்டணியில் விருப்பம் இருந்தாலும் பலருக்கு அதில் உடன்பாடில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த ரகசிய மீட்டிங்குகளுக்கு அண்ணாமலை ஒரு காரணமாக இருந்தாலும் இந்த முறையும் தோல்வி அடைந்து விட்டால் அதுகட்சிக்கு மட்டும் இன்றி தன்னுடைய பதவிக்கும் ஆபத்து என்று இபிஎஸ் இது போன்ற சீக்ரெட் மீட்டிங்குகளில் கலந்து கொள்வதாக சொல்கின்றனர்.





















