மேலும் அறிய

பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள்: உதகை மலர் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உதகை தாவரவியல் பூங்காவில் 124 வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இன்று துவங்கிய மலர் கண்காட்சி வருகின்ற 24 ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் ஏப்ரல், மே ஆகிய கோடை மாதங்களில் அதிகளவில் வருவது வழக்கம். சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உதகை கோடை விழா நடத்தப்படவில்லை. இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், கோடை விழா நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. 

அதன்படி கடந்த 7 ம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி உடன் கோடை விழா துவங்கியது. நீலகிரி மாவட்ட நிர்வாகம், தோட்டக் கலைத் துறை மற்றும் சுற்றுலாத் துறை ஆகியவை சார்பில் வருகின்ற 31ம் தேதி வரை கோடை விழா நடைபெற உள்ளது. கோடை விழாவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு, கண்காட்சியை ஆர்வத்துடன் கண்டு இரசித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள்: உதகை மலர் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர் கண்காட்சி இன்று துவங்கியது. உதகை தாவரவியல் பூங்காவில் 124 வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி மலர் கண்காட்சியை துவக்கி வைத்தார். அப்போது வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இன்று துவங்கிய மலர் கண்காட்சி  வருகின்ற 24 ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. 

பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள்: உதகை மலர் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மலர் கண்காட்சியில் 275 மலர் வகைகளை சேர்ந்த 5.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மலர்கள் இடம் பெற்றுள்ளன. விழாவின் முக்கிய அம்சமாக ஒரு லட்சம் கார்னேசன் மலர்களால் வேளாண் பல்கலைக்கழக கட்டிட முகப்பு தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரியில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் 6 பழங்குடி மக்களின் உருவங்கள் கொய் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் ஆனதையொட்டி ‘ஊட்டி 200’ என்று மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள்: உதகை மலர் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக 35 ஆயிரம் மலர் தொட்டியில் ஓரியடல் லில்லி, ஏசியாடிக் லில்லி, கேலஞ்சியோடு, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரி கோல்டு, பிளாக்ஸ், பெட்டுனியா, சால்வியா, செம்பா, ஆஸ்டர், பால்சம் உள்ளிட்ட மலர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் மலர்கள் குறித்து கேட்டறிந்தார்.

பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள்: உதகை மலர் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மலர் கண்காட்சியை முன்னிட்டு இன்று நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏராளமான சுற்றுலா பயணிகள் பூத்துக் குலுங்கும் மலர்களை உற்சாகத்துடன் கண்டு இரசித்து வருகின்றனர். கோடை விழாவினை முன்னிட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் உதகைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget