Train Cancelled: செங்கல்பட்டு, சென்னை கடற்கரை, திருவள்ளூர் ரயில்கள் ரத்து... முழு தகவல் உள்ளே...
செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய வழித்தடங்களில் இயக்கக்கூடிய மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கடற்கரை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய வழித்தடங்களில் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்றியமையாத ரயில் சேவை
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, அதேபோன்று இதற்கு மறு மார்க்கமாக இயக்கக்கூடிய செங்கல்பட்டு - சென்னை கடற்கரை ரயில் சேவைகள் சென்னையில் மிகப் பிரதான ரயில் சேவையாக உள்ளது. தினமும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவ மாணவிகள், வேலைக்குச் செல்பவர்கள் என பல தரப்பட்ட மக்கள் பயன்படுத்தக்கூடிய ரயில் சேவையாக உள்ளது.
அதேபோன்று திருவள்ளூர் - சென்னை கடற்கரை வரை இயக்கக்கூடிய ரயில் சேவைகளும் மிக முக்கிய ரயில் சேவைகளில் ஒன்றாக உள்ளது. குறைந்த விலையில் பயணம் செய்யலாம் என்பதால், வேலைக்கு செல்பவர்கள் பயன்படுத்தக்கூடிய போக்குவரத்தாக இந்த ரயில் சேவைகள் உள்ளன. அவ்வப்போது இந்த ரயில் சேவைகள் பராமரிப்பு பணி காரணமாக, ரத்து செய்யப்படும் அல்லது மாற்றி அமைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
8 மின்சார ரயில்கள் ரத்து
அந்த வகையில் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில்கள் மற்றும் திருவள்ளுவர் முதல் சென்னை கடற்கரை வரை இயக்கக்கூடிய மின்சார ரயில்கள் இன்று மற்றும் நாளை ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில் கோட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில் கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :
1. இரவு 9:35 மணிக்கு திருவள்ளூர் - சென்னை கடற்கரை வரை இயக்கக்கூடிய மின்சார ரயில் இன்று மற்றும் நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இரவு 8:25 மணிக்கு சென்னை கடற்கரை - தாம்பரம் வரை இயக்கக்கூடிய மின்சார ரயில் இன்று மற்றும் நாளையும் ரத்து செய்யப்படுகிறது.
3.இரவு 8:55 மணிக்கு சென்னை கடற்கரை - தாம்பரம் வரை இயக்கக்கூடிய மின்சார ரயில் இன்று மற்றும் நாளையும் ரத்து செய்யப்படுகிறது.
4. இரவு 10:20 மணிக்கு சென்னை கடற்கரை - தாம்பரம் வரை இயக்கக்கூடிய மின்சார ரயில் இன்று மற்றும் நாளையும் ரத்து செய்யப்படுகிறது.
5. இரவு 7:50 மணிக்கு சென்னை கடற்கரை - திருவள்ளூர் வரை செல்லக்கூடிய மின்சார ரயில் இன்று மற்றும் நாளை ரத்து செய்யப்படுகிறது
6. சென்னை கடற்கரை முதல் அரக்கோணம் வரை செல்லும் காலை 4:05 மணிக்கு செல்லும் ரயில் வருகின்ற 11 மற்றும் 12ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
7. கும்மிடிபூண்டி முதல் சென்னை கடற்கரை வரை செல்லக்கூடிய இரவு ரயில் 9:55 இன்று மற்றும் நாளை ரத்து செய்யப்படுகிறது.
பாதி வழியில் ரத்தாகும் ரயில்கள்
1. காலை 3:55 மணிக்கு சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை செல்லும் ரயில் இன்று மட்டும் நாளையும் எழும்பூரில் இருந்து செல்லும். அது மட்டும் இல்லாமல் இரவு 9:10 மணிக்கு செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில்கள் இன்று மற்றும் நாளை எழும்பூர் வரை மட்டுமே செல்லும்.
2. திருமால்பூர் முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் இரவு 8 மணி இன்றும் நாளையும் எழும்பூர் வரை மட்டுமே செல்லும்.
3. இரவு 11:5 மணி, 11:30 மணி 11 59 மணி ஆகிய ரயில்கள் இன்றும் நாளையும் எழும்பூரில் இருந்து செல்லும்.
4. இரவு 10:10 மணிக்கு, 11 மணிக்கு செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில்கள் இன்று மற்றும் நாளை எழும்பூர் வரை மட்டுமே செல்லும்.
கூடுவாஞ்சேரி - சென்னை கடற்கரை ரயில்கள்
கூடுவாஞ்சேரி முதல் சென்னை கடற்கரை வரை இயக்கக்கூடிய இரவு 10:10,10:40,11:15 மணி ரயில்கள் இன்றும் நாளையும் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்கள் முழுமையாகவும் சில ரயில்கள், பாதி வழியில் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் ,தங்கள் பயணத்தை அதற்கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நேரத்திற்கு கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளும் மாநகர போக்குவரத்து சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

