Karthigai Deepam: மாயமான நெக்லஸ்! மாயாவுடன் மல்லுகட்டிய சாமுண்டீஸ்வரி - சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம்
Karthigai Deepam Serial: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ஜீ தமிழ் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆசாரியை அழைத்து ரேவதிக்கு தாலி செய்ய, மயில் வாகனம் அதை மாற்றி வைத்து விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, தாலி செய்து முடித்ததை தொடர்ந்து சாமுண்டீஸ்வரியின் பணக்கார நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வீட்டிற்கு வருகிறாள்.
மாயமாகும் நெக்லஸ்:
கல்யாணத்திற்கு வர முடியாது என்பதால் இப்பொது வந்ததாக சொல்லும் அவள், ரேவதிக்கு வாழ்த்து சொல்லி வைர நெக்லஸ் ஒன்றை கிப்டாக கொடுக்கிறாள். இதை பார்த்த மாயா வாய் பிளக்கிறாள்.
அடுத்ததாக மகேஷ் அருகே சென்று அந்த வைர நெக்லஸ் பற்றி பேச கார்த்திக் இதை கவனிக்கிறான். உடனே நகையை எடுத்து மறைத்து வைத்து விடுகிறான்.
சாமுண்டீஸ்வரி - மாயா மோதல்:
வீட்டில் நகையை காணவில்லை என்று சொல்ல மாயா கடுப்பாகி என்ன நீ உன்னால் ஒரு நகையை கூட பத்திரமா பார்த்துக்க முடியாதா என்று சத்தம் போடுகிறாள். ஒரு கட்டத்தில் ரேவதி கடுப்பாகி என்ன நீங்க நகை தான் முக்கியமா? இந்த கல்யாணம் நல்லபடியுமா நடக்கணும்னு யோசிக்க மாட்டிங்களா என்று பதிலடி கொடுக்கிறாள். பிறகு அந்த நகையும் கிடைத்து விடுகிறது.
பிறகு சாமுண்டீஸ்வரி நகைக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை மனுஷங்களுக்கு கொடுங்க.. நாளைக்கு கல்யாண வரவேற்பு நிகழ்ச்சி இருக்கு.. வந்துடுங்க என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள் .

