மேலும் அறிய

Dindigul to Kumily NH: திண்டுக்கல் To குமுளி 4 வழிச்சாலை திட்டம் - தடுக்கிறதா தமிழக அரசு?

Dindigul to Kumily NH: தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்கு நில எடுப்பு பணிக்கு, தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை என்று பரவலான குற்றச்சாட்டு உள்ளது.

திண்டுக்கல் - குமுளி நான்கு வழிச்சாலை விரிவாக்க திட்டத்திற்கு, தமிழக அரசின் ஒத்துழைப்பை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எதிர்பார்த்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் வகையில், திண்டுக்கல், கொல்லம் இடையே, 295 கி.மீ., மாநில நெடுஞ்சாலை இருந்தது. அந்தந்த மாநில நெடுஞ்சாலைத் துறைகள் வாயிலாக, அவரவர் எல்லை வரை, இந்த சாலைகள் அரைகுறையாக பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த சாலையை கடந்து செல்வது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக சாலை விபத்துகளும் அதிகரித்துள்ளது.

Dindigul to Kumily NH: திண்டுக்கல் To குமுளி 4 வழிச்சாலை திட்டம் - தடுக்கிறதா தமிழக அரசு?

கடந்த 2010ல், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக, இரண்டு வழிச்சாலையாக இது தரம் உயர்த்தப்பட்டது. மொத்தம் 10 அடி அகலத்தில் உள்ள இச்சாலையில், வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. சபரிமலை சீசன் மற்றும் கோடை விடுமுறை காலங்களில், இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்த சாலையில், திண்டுக்கல், குமுளி வரை, 125 கி.மீக்கு நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 60 அடி அகல சாலையாக, இது விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதற்காக, 3,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட, மத்திய அரசு முன்வந்துள்ளது.

தற்போது திண்டுக்கல்லில் இருந்து குமுளி செல்வதற்கு குறைந்தபட்சம், இரண்டே முக்கால் மணி நேரம் தேவைப்படுகிறது. இச்சாலை விரிவாக்க பணிகள் முடிந்தால், ஒரு மணி நேரம் வரை, பயண நேரம் குறையும். சபரிமலை சீசனில் பக்தர்கள் எளிதாக அங்கு சென்று வருவர். இச்சாலை விரிவாக்க பணிக்கு, இரு புறங்களிலும், தலா 25 அடிக்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். இதில் விவசாய நிலங்கள் அதிகளவில் வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்கு நில எடுப்பு பணிக்கு, தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை என்று பரவலான குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், இச்சாலைக்கு அடுத்த ஆறு மாதங்களில், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு விடும். அதன்பின், சாலை பணிக்கு எவ்வளவு நிதி தேவைப்படும். எவ்வளவு நிலங்களை கையகப்படுத்த வேண்டி இருக்கும் என்ற முழு விபரங்கள் தெரியவரும்.

Dindigul to Kumily NH: திண்டுக்கல் To குமுளி 4 வழிச்சாலை திட்டம் - தடுக்கிறதா தமிழக அரசு?

தமிழக அரசின் ஒத்துழைப்பு கிடைத்தால், திட்ட மதிப்பீடு தயாரிப்பு மற்றும் சாலை விரிவாக்க பணிகள், குறித்த காலத்திற்குள் முடியும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்களில் கூறுகையில், திண்டுக்கல், குமுளி நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு, நிதி ஆதாரம் ஒரு பிரச்னையே இல்லை. தேவையான நிதியை வழங்க, 2024ல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்புதல் வழங்கி விட்டது. இந்த சாலை பணிக்கு, விவசாய பட்டா நிலங்கள் அதிகளவில் கையகப்படுத்த வேண்டிஉள்ளது. இந்த நிலங்களை கையகப்படுத்தும் பணிக்கு, மாநில அரசின் ஒத்துழைப்பு முழுமையாக தேவை. பிரச்னையின்றி நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவு பெற்றால், வரும் டிசம்பர் அல்லது அடுத்தாண்டு ஜனவரி மாதம், சாலை விரிவாக்க பணிகள் துவங்கும். அடுத்த 12 மாதங்களில் பணியை நிறைவு செய்து, சாலை, பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை திறப்பதற்கும், தமிழக அரசு உதவ முன்வர வேண்டுமென கூறப்படுகிறது.

Dindigul to Kumily NH: திண்டுக்கல் To குமுளி 4 வழிச்சாலை திட்டம் - தடுக்கிறதா தமிழக அரசு?

தேனி மாவட்டத்தில், மதுரை - கொச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 85 மற்றும் திண்டுக்கல், கொல்லம் தேசிய நெடுஞ்சாலை எண் 185 என, இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. மதுரையில் இருந்து தேனி, போடி, தேவிகுளம், மூணாறு, மூவாற்றுப்புழா, கொச்சி வரை, தேசிய நெடுஞ்சாலை எண் 85 உள்ளது. தற்போது, இந்த சாலை மதுரையிலிருந்து சிவகங்கை வழியாக, தொண்டி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் முதல் குமுளி இடையிலான, இரண்டு வழிச்சாலை திண்டுக்கல்லில் துவங்கி, தேனி, கம்பம், குமுளி, வண்டிப் பெரியாறு, கோட்டயம், கொல்லம் வரை உள்ளது. இது நான்கு வழியாக விரிவாக்கம் செய்யப்படுவதால், இரு மாநில போக்குவரத்து மேம்பட்டு, பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
Meerut Murder: கணவரை துண்டுகளாக வெட்டி, சிமெண்ட் ட்ரம்மில் அடைத்த மனைவி - காதலனுடன் குத்தாட்டம், வீடியோ வைரல்
Meerut Murder: கணவரை துண்டுகளாக வெட்டி, சிமெண்ட் ட்ரம்மில் அடைத்த மனைவி - காதலனுடன் குத்தாட்டம், வீடியோ வைரல்
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை - இன்று கூட்டுக்குழு கூட்டம், சென்னையில் எதிர்க்கட்சி சி.எம்.,கள் - ஸ்டாலின் மூவ்
CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை - இன்று கூட்டுக்குழு கூட்டம், சென்னையில் எதிர்க்கட்சி சி.எம்.,கள் - ஸ்டாலின் மூவ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
Meerut Murder: கணவரை துண்டுகளாக வெட்டி, சிமெண்ட் ட்ரம்மில் அடைத்த மனைவி - காதலனுடன் குத்தாட்டம், வீடியோ வைரல்
Meerut Murder: கணவரை துண்டுகளாக வெட்டி, சிமெண்ட் ட்ரம்மில் அடைத்த மனைவி - காதலனுடன் குத்தாட்டம், வீடியோ வைரல்
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை - இன்று கூட்டுக்குழு கூட்டம், சென்னையில் எதிர்க்கட்சி சி.எம்.,கள் - ஸ்டாலின் மூவ்
CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை - இன்று கூட்டுக்குழு கூட்டம், சென்னையில் எதிர்க்கட்சி சி.எம்.,கள் - ஸ்டாலின் மூவ்
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
IPL 2025: முதல் போட்டிக்கே ஆபத்தா! கொல்கத்தாவுக்கு ஆரஞ்சு அலர்ட்? அதிர்ச்சியில் ரசிகர்கள்
IPL 2025: முதல் போட்டிக்கே ஆபத்தா! கொல்கத்தாவுக்கு ஆரஞ்சு அலர்ட்? அதிர்ச்சியில் ரசிகர்கள்
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
IPL 2025 Fan Parks: ஐபிஎல் ஃபேன் பார்க் - எங்கு, எப்போது? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் அமையும்? டிக்கெட் விலை
IPL 2025 Fan Parks: ஐபிஎல் ஃபேன் பார்க் - எங்கு, எப்போது? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் அமையும்? டிக்கெட் விலை
Embed widget