மேலும் அறிய
Ambiga Theatre: சென்னையில் உதயம் தியேட்டரை தொடர்ந்து மதுரையில் இடிக்கப்படும் தியேட்டர் - ரசிகர்கள் அதிர்ச்சி
Madurai Ambiga Theatre: தொடர்ந்து முக்கியமான திரையரங்குகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறதா என்ற கேள்வி தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுப்பப்பட்டுள்ளது.

அம்பிகா சினிமாஸ் மதுரை
Source : whats app
உதயம் தியேட்டர் முதல் அம்பிகா தியேட்டர்
சாமானிய மக்கள் குடும்பங்களுடன் சென்று திரைப்படம் பார்ப்பதற்கு ஏற்ற திரையரங்கமாக இருந்து வந்தது சென்னை உதயம் தியேட்டர். 1983ம் ஆண்டு முதல் சென்னையில் இயங்கி வந்த உதயம் தியேட்டரின் 42 ஆண்டுகால பயணம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் உதயம் தியேட்டரைப் போல் மதுரையில் திரையரங்கம் இடிக்கப்பட உள்ளது, சினிமா ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அம்பிகா திரையரங்கம்
மதுரையில் அண்ணா நகர் அருகே உள்ள அம்பிகா திரையரங்க வளாகம் இடிக்கப்பட உள்ளது. மதுரை சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்த இந்த திரையரங்கம், பொழுதுபோக்கு வரலாற்றில் முக்கிய பங்கு வகித்தது. மதுரையின் பொழுதுபோக்கு வரலாற்றில் அம்பிகா திரையரங்கத்தின் பங்கு மிகப் பெரியது. இந்த திரையரங்கம் 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த திரையரங்கில் பல தொழில்நுட்பங்கள் மதுரையில் முதன் முறையாக டிடிஎஸ் சவுண்ட் உடன் ரட்சகன் படம் மற்றும் 2கே, 3கே, 4கே திரையிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாட்ஷா, வாலி, கில்லி, கஜினி, ஆளவந்தான், தூள், ரன், அலைபாயுதே உள்ளிட்ட பல படங்கள் நூறு நாட்கள் மேலாக ஓடியது. இதன் சிறப்பு பெயர் இன்றைக்கும் அம்பிகா அம்பிகா என்றே கூறுவர்.
வெகுவிரைவில் திரையரங்கம் மூடப்பட உள்ளது.
திரையரங்குகளில் கேண்டினில் அதிகமான விலைக்கு ஸ்நாக்ஸ் விற்பனை செய்து வரும் நிலையில் இன்றும் மலிவான விலைக்கு பாப்கார்ன் மற்றும் கோன் ஐஸ் கிரீம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது, அம்பிகா திரையரங்க வளாகம் முழுவதும் இடித்து பெரிய வணிக வளாகம் கட்ட முடிவு செய்து உள்ளோம். இந்த திரையரங்குகளில் ஒரு இலட்சம் சதுர அடியில் பெங்களூர் இன்ஜினியரிங்கள் மூலம் சிறப்பு வாய்ந்த ஷாப்பிங் பில்டிங் கட்ட முடிவு செய்து உள்ளோம். வெகுவிரைவில் திரையரங்கம் மூடப்பட உள்ளது.
18 மாதங்கள் வரை மூடப்பட்டு புதிதாக கட்டிடங்கள் கட்டப்படும்.
இதனைத் தொடர்ந்து வருகின்ற வெள்ளிக் கிழமை அன்று ரசிகர்கள் கொண்டாடும் விதமாகவும், திரையரங்கம் முன்பு செல்போனில் செல்பி எடுத்து கடைசியாக நினைவுகளை பகிர வாய்ப்பு ஏற்படுத்தபடுகிறது. இதனால் அனைவரும் வருகின்ற, வெள்ளிக் கிழமை அன்று நினைவுகளை பகிருமாறு திரையரங்கம் உரிமையாளர் ஆனந்த் கேட்டு கொண்டார். தற்போதைய தமிழ் சினிமாவின் சூழல் மிகவும் பின்னோக்கி செல்கிறதா தொடர்ந்து முக்கியமான திரையரங்குகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறதா என்ற கேள்வி தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுப்பப்பட்டுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Online Part Time Job வேலை தருவதாகக் கூறி ரூ.52 லட்சம் மோசடி.. 3 பேரை தட்டி தூக்கிவந்த மதுரை தனிப்படை !
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - செங்கோட்டையன் பதவிக்கு ஆப்பு? சண்டைய இழுத்துவிடாதீங்க! – உளறிக்கொட்டிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் அதிமுக
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
தமிழ்நாடு
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion