மேலும் அறிய

“முதலில் அண்ணாமலை இதை செய்து காட்டினால்” - அமைச்சர் சேகர்பாபு விடுத்த சவால் என்ன?

முதலில் அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலில் நிற்கட்டும் அப்படி நின்றால் அதே சட்டமன்றத் தொகுதியில் திமுகவின் கடைகோடி தொண்டனை நிறுத்தி அவரை வீழ்த்துவோம் என அமைச்சர் சேகர்பாபு அண்ணாமலைக்கு சவால்.

அன்னம் தரும் அமுத கரங்கள் திட்டம் தொடக்கம்

சென்னை கொளத்தூர் ஜெகநாதன் தெரு முதல்வர் படைப்பகம் அருகில் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் ஆண்டு முழுவதும் அன்னம் தரும் அமுதக் கரங்கள் என்ற திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்து பொது மக்களுக்கு உணவளித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மக்கள் முதல்வரின் மனிதநேய விழா முதல் நிகழ்ச்சியாக பிப்ரவரி 20 ஆம் தேதியான இன்று தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி வரை 365 நாட்களும் நாள் ஒன்றுக்கு 1000 முதல் 1200 பேருக்கு துறைமுகம், திரு.வி.க நகர், அம்பத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் தொகுதிகள் என கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் அமுதக் கரங்கள் திட்டம் மூலம் தினம் தோறும் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, வெற்றி அழகன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்...

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர் பாபு

ஒன்றியத்தின் இரும்பு மனிதன் என்று போற்றப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஆடம்பரமாக இல்லாமல் மக்களுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என்று நல்வழிப்படுத்தி காட்டியுள்ளார். 

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் வாழ்வாதாரம் சிறக்க நலத் திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார் அந்த வகையில் இன்று இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த ஆட்சி ஏற்பட்ட பின் இல்லாமை என்பது ஒருபுறம் இல்லாமல் போனது. மழலைச் செல்வங்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அளித்தவர் நம்முடைய முதல்வர். ஒட்டு மொத்த தமிழகத்தின் அன்னதான பிரபு எங்கள் தமிழக முதல்வர் என்றால் அது மிகையாகாது. 

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் மூன்று கோடியே 50 லட்சம் பேர் அன்னதான திட்டத்தால் ஒரு ஆண்டிற்கு பயனடைந்து வருவதாகவும், ஒரு ஆண்டுக்கு 112 கோடி இந்த திட்டத்துக்கு மட்டும் செலவாகிறது என்று கூறிய அமைச்சர் ஒருவேளை அன்னதான திட்டம் இந்த ஆட்சி ஏற்பட்ட பின் 27 கோவில்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 50 பேருக்கு என்று இருந்த அன்னதானத் திட்டத்தை பல இடங்களில் 100 பேருக்கு என்று மாற்றியமைத்து உள்ளோம். திருவிழாக்களில் இருநூறு என்ற அளவில் இருந்ததை 500 என்று அளவு என எண்ணிக்கை அளவுகளை உயர்த்தி இருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆறு தொகுதிகளில் சுழற்சி முறைகளில் இரண்டு இடங்களாக பிரித்து 500 பேருக்கு 500 பேருக்கு என்ற வகையில் உணவு வழங்கப்பட உள்ளது.

அண்ணாமலைக்கு சவால் விட்ட சேகர்பாபு

நலத்திட்டங்கள் நடைபெறுவது நாளுக்கு நாள் திருக்கோவில்களில் பக்தர்கள் எண்ணிக்கை கூடுவதும் பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது, தேவார திருவாசகம் நடைபெறுவதும் எப்படி அண்ணாமலை போன்றவர்களுக்கு எப்படி வயிற்று எரிச்சலை கிளப்பாமல் இருக்கும் ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்தவர்களுக்கு அது முடியாத காரணத்தினால் இப்படி ஏதாவது பேசிக் கொண்டுதான் இருப்பார்கள் இது காய்ச்ச காய்ச்ச மெருகு ஏறும் இயக்கம் என்றார்.

முதலில் அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலில் நிற்கட்டும் அப்படி நின்றால் அதே சட்டமன்றத் தொகுதியில் திமுகவின் கடைகோடி தொண்டனை நிறுத்தி அவரை வீழ்த்துவோம் என அமைச்சர் சேகர்பாபு அண்ணாமலைக்கு சவால்..

2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக வரட்டும் பார்க்கலாம் என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
EPS ADMK: அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
ABP Premium

வீடியோ

Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி
MP Jothimani Issue | ’’எதுக்கு வந்தீங்க ஜோதிமணி?’’வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்அடித்து விரட்டிய காங்கிரஸார்’’ஏய்..போடா’’
வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
EPS ADMK: அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Trump Vs Petro: அமெரிக்காவிடமிருந்து தப்புமா கொலம்பியா.? ட்ரம்ப்பை அழைத்துப் பேசிய பெட்ரோ; விரைவில் சந்திப்பு
அமெரிக்காவிடமிருந்து தப்புமா கொலம்பியா.? ட்ரம்ப்பை அழைத்துப் பேசிய பெட்ரோ; விரைவில் சந்திப்பு
iPhone 200mp Camera: DSLR-களை ஓரங்கட்ட வரும் ஆப்பிள் ஐபோன்; ஆத்தாடி.! 200 MP கேமராவா.? சம்பவம் எப்போ தெரியுமா.?
DSLR-களை ஓரங்கட்ட வரும் ஆப்பிள் ஐபோன்; ஆத்தாடி.! 200 MP கேமராவா.? சம்பவம் எப்போ தெரியுமா.?
Chennai Power Cut: சென்னைல ஜனவரி 9-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரியுமா.? விவரம் இதோ
சென்னைல ஜனவரி 9-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரியுமா.? விவரம் இதோ
JanaNayagan: ஜனநாயகனுக்காக காங்., வக்காலத்து.. ”ஆர்.எஸ்.எஸ்., படங்கள் மட்டும் கலாச்சாரமா?” என கேள்வி
JanaNayagan: ஜனநாயகனுக்காக காங்., வக்காலத்து.. ”ஆர்.எஸ்.எஸ்., படங்கள் மட்டும் கலாச்சாரமா?” என கேள்வி
Embed widget