அடுத்த பட ஹீரோவை லாக் செய்த மணிரத்னம்...அட இவரா...செம சாய்ஸ்
மணிரத்னம் இயக்கப் போகும் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெமியாகியுள்ளன

மணிரத்னம்
தமிழ் திரையுலகின் தனித்துவமான கதை சொல்லிகளில் ஒருவர் மணிரத்னம். மெளன ராகம் , அலைபாயுதே , ஓ காதல் கண்மணி என இவரது ரொமாண்டிக் படங்கள் இன்றையை தலைமுறை ரசிகர்களிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. காதல் தவிர்த்து ரோஜா , பம்பாய் , குரு , கண்ணத்தில் முத்தமிட்டாள் போன்ற சீரியஸான கதைகளையும் படமாக்கியுள்ளார். கமலை வைத்து நாயகன் , ரஜினியின் தளபதி என பெரிய ஸ்டார்களுடன் இவர் இயக்கிய படங்கள் கிளாசிக் படங்களாக கருதப்படுகின்றன
மணிரத்னம் அறிமுகப்படுத்திய நட்சத்திரங்கள்
தளபதி படத்தில் அரவிந்த் சாமி , இருவர் படத்தில் ஐஸ்வர்யா ராய் , நடிகர் மாதவன் , இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் என இந்திய சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் மணிரத்னம் படங்களில் அறிமுகமாகியுள்ளார்கள்.
தக் லைஃப்
தற்போது கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தை இயக்கியுள்ளார் மணிரத்னம். த்ரிஷா , அபிராமி , சிம்பு , அசோக் செல்வன் , ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசைமைக்கிறார். நாயகன் படத்தைத் தொடர்ந்து 38 ஆண்டுகளுக்குப் பின் கமல் மணிரத்னம் கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது.
மணிரத்னம் படத்தில் தெலுங்கு நடிகர்
தக் லைஃப் படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் மீண்டும் ஒரு காதல் கதையை இயக்க இருப்பதாகவும் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டி இப்படத்தில் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கில் ஏஜண்ட் சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா , ஜாதி ரத்னலு , மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி ஆகிய படங்களில் நடித்து தனக்கென ஒரு சிறு ரசிக பரப்பை உருவாக்கியுள்ளார் நவீன் பொலிஷெட்டி. இருந்தும் இவரது நடிப்பு பெரியளவில் பேசப்படவில்லை. தற்போது மணிரத்னம் படம் அவருக்கு தமிழ் , இந்தி , மற்றும் தெலுங்கு சினிமாவில் பெரிய பட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்பலாம். தக் லைஃப் படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

