Breaking LIVE: வெள்ளிக்கிழமை ரெட் அலார்ட்; அதிகபட்சம் 20 செ.மீ மழை பெய்யும் என எச்சரிக்கை..!
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Background
உச்சிப்பிள்ளையார் கோயிலில் மகா தீபம் ஏற்றம்..!
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
33 வார கருவை கலைக்க உயர்நீதிமன்றம் அனுமதி..!
டெல்லியை சேர்ந்த 26 வயதான பெண்ணின் 33 வார கருவை கலைக்க, டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பெருமூளையில் பாதிப்பை கொண்டுள்ள கருவை கலைக்க மருத்துவமனை அனுமதி மறுத்த போதிலும், கருவை கலைப்பது பற்றி தாய் எடுக்கும் முடிவே இறுதியானது என, நீதிபதி பிரதிபா சிங் தெரிவித்துள்ளார்.
மருத்துவ கவுன்சில் தேர்தலை ஒத்திவைக்க உத்தரவு
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க, மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைனில் தேர்தலை நடத்துவது தொடர்பான விதிமுறைகளை வகுக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
2.4 கிலோ போதை பொருளுடன் இந்தியாவிற்குள் ஊடுருவிய பாகிஸ்தானின் டிரோன் விமானம்
பஞ்சாப்பின் தார்ன் தரன் பகுதியில் காலியா என்ற கிராமம் அருகே, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் டிரோன் மூலம் 2.4 கிலோ எடை கொண்ட ஹெராயின் வகை போதை பொருள் கடத்தி வரப்பட்டது. இதனை கண்ட எல்லையில் ரோந்து மற்றும் பாதுகாப்பு படையில் ஈடுபட்டு இருந்த எல்லை பாதுகாப்பு படையினர். டிரோனை பறிமுதல் செய்தனர்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் நீக்கம்..!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரமேஷ் பவார் திரும்பப் பெறப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. தொடர்ந்து, தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவர் வி.வி.எஸ் லட்சுமனனுடன் இணைந்து, ஆடவர் கிரிக்கெட் அணியை மறுசீரமைப்பதற்கன பணியில் ரமேஷ் பவார் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக ரிஷிகேஷ் கனித்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

