Moonglet Recipe: சத்துக் குறைபாட்டைக் குறைக்கும் எளிய மூங்லெட் உணவு - செய்வது எப்படி?
சத்துக்குறைபாட்டைக் குறைக்கும் உணவு பண்டங்களை ஏபிபி நாடு செய்தி தளம் தொடர்ந்து அளித்து வருகிறது
வீட்டில் எளிமையான முறையில் செய்யும், நுண்ணூட்டசத்து மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு பண்டங்கள் குறித்த தகவலை மக்களிடம் கொன்று செல்வது இன்றியமையாதாகிறது. சத்துக்குறைபாட்டைக் குறைக்கும் உணவு பண்டங்களை ஏபிபி நாடு செய்தி தளம் தொடர்ந்து அளித்து வருகிறது.
அந்த வகையில், டெல்லி போன்ற வட மாநிலங்களில் பாசி பருப்பை கொண்டு செய்யப்படும் மூங்லெட் உணவு பண்டத்தைக் குறித்து இங்கே காண்போம்.
உடல் பருமனாதலைக் குறைக்க இந்த உணவு பயன்படுகிறது. இந்த மூங்லெட் சிற்றுண்டியை ஊற வைத்த பாசி பருப்பை அரைத்து மசாலா, வெங்காயம், தக்காளி மற்றும் குடைமிளகாய் சேர்த்து தயாரிக்கலாம். குறைவான எண்ணெய் இதற்கு தேவைப்படுவதால், உடலுக்கு எந்தவித கெடுதலையும் ஏற்படுத்தாது.
பாசிப்பருப்பு( 1 கப்), வெங்காயம் (தேவையான அளவு), பீட்ரூட், முட்டை கோஸ், கேரட்
குடைமிளகாய் போன்ற உணவுப் பொருட்கள் கொண்டு இந்த உணவை செய்யலாம்.
இந்தியாவில் உணவு வாயிலாகப் பரவும் நோய்களால் தோராயமாக 15 பில்லியன் டாலர் என்ற பெரிய அளவுக்கு பொருளாதார செலவினம் ஏற்படுவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. குழந்தைகள் மத்தியில் உணவை வீணாக்குதல்(21%), எடை குறைவு (36%), வளர்ச்சிக்குறைபாடு (38%) ஆகியவை பொதுவானதாகக் காணப்படுகின்றன. ரத்த சோகையால் 50 % பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். ஆண்கள் மத்தியில் பத்தாண்டுகளில் (2005-15) உடல் பருமனாதல் என்பது 9.3%-த்தில் இருந்து 18.6 % ஆகவும் , பெண்கள் மத்தியில் 12.6%-த்தில் இருந்து 20.7% ஆக அதிகரித்திருக்கும் அதே நேரத்தில் தொற்றா நோய்கள் காரணமாக ஏற்படும் இறப்புகளும் அதிகரித்திருக்கின்றன.
மேலும், கொரோனா பெருன்தொற்றுக்கு எதிராக, பச்சைக் காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், விதைகள், பருப்புகள், முழுதானிய உணவுகள், தூய்மையான எண்ணெய்கள் ஆகியவற்றை முடிந்த அளவு பயன்படுத்துவதும், சோடா, உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு உபயோகத்தைக் குறைப்பதும், சத்தற்ற, சர்க்கரை அதிகமுள்ள உணவுகளைத் தவிர்ப்பது ஆகியவற்றை உலக சுகாதார நிறுவனம், பிரிட்டிஷ் டயட்டெட்டிக்ஸ் சங்கம் ஆகியவை வலியுறுத்துகின்றன. உணவைத் தவிர, உடற்பயிற்சி, தியானம், போதிய தூக்கம் மற்றும் சூரிய ஒளி உடலின் மீது படுதல் ஆகியவற்றையும் வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்