News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Navaratri : தீபாவளின்னா அதிரசம், முறுக்கு.. நவராத்திரின்னா தேங்காய் பூ லட்டும், பளபள பாயசமும்.. ரெசிப்பி கார்னர்

நவராத்திரியில், மகிஷாசுரமர்த்தனியான,துர்கா தேவியை வணங்குவதற்கு, இனிப்புகள் நெய்வேத்தியமாக படைக்கலாம்.

FOLLOW US: 
Share:

இந்தியாவைப் பொறுத்தவரை, திருவிழாக்கள் என்பது இந்தியர்களின் ரத்தத்தில் கலந்துவிட்ட ஒன்றாகும். பொங்கல், தீபாவளி மற்றும் நவராத்திரி என ஒவ்வொரு திருவிழாவை எதிர்பார்த்து வீட்டில் இருக்கும் ஆண்களும் பெண்களும் மற்றும் குழந்தைகளும் காத்திருப்பர்.

இந்த திருவிழாக்கள் சண்டையிட்டு பிரிந்த சொந்தங்களையும், நண்பர்களையும் திரும்ப ஒருங்கிணைக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்று ஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறது. ஆகையால் இப்படி பகைமை மறந்து, சொந்தங்களுக்குள்ளும், நட்புகளுக்குள்ளும்   மனமகிழ்ச்சியோடு தெய்வங்களை வணங்குவதற்கு,குறிப்பாக இந்த நவராத்திரியில், மகிஷாசுரமர்த்தனியான,துர்கா தேவியை வணங்குவதற்கு, இனிப்புகள் மிகவும் அவசியம்.

இப்படி பண்டிகை தினங்களில் வீடுகளில் ஒன்றிற்கு மேற்பட்ட இனிப்பு வகைகள்,அதிலும் குறிப்பாக குடிப்பதற்கும், உண்ணுவதற்கும் ஏற்ற வகையில் இருப்பது, வீட்டில் இருக்கும் குழந்தைகள்,சிறுவர்,சிறுமிகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

இந்த திருவிழா நாட்களில் செய்ய வேண்டிய இனிப்பு வகைகளை காணலாம்.

ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்:

ஜவ்வரிசியை கொண்டு, சுவையான பாயாசம் செய்வது என்பது, திருவிழா காலங்களில், இல்லம் தோறும், அனைவராலும் விரும்பப்படும்,ஒரு இனிப்பாகும். இதை செய்வதற்கு ஜவ்வரிசி 100 கிராம்,சேமியா 100 கிராம்,நாட்டு சர்க்கரை 200 கிராம்,முந்திரி 50 கிராம்,திராட்சை 50 கிராம்,பால் அரை லிட்டர்,ஏலக்காய் 4,குங்குமப்பூ சிறிதளவு மற்றும் சிறிதளவு நெய் என எடுத்து கொள்ளவும்.

முதலில் வாணலியில் நெய் விட்டு சூடுபடுத்திக்கொள்ளவும்,அதில் முந்திரிப் பருப்பு மற்றும் திராட்சை இரண்டையும் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வேறு ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை நன்றாக வேகவைத்து, அதில் சேமியாவை சேர்க்கவும். சேமியாவும் நன்கு வெந்தபின்,பாலை இதில் விட்டு நன்றாக சுண்ட விடவும். ஜவ்வரிசி,சேமியா மற்றும் பால் மூன்றும் நன்றாக கலந்து,சிறிது சுண்டிய பிறகு, நாட்டுச் சர்க்கரை அல்லது சர்க்கரையை இதில் சேர்த்து, நன்றாக  கலக்கவும்.பிறகு ஏற்கனவே வறுத்து வைத்திருக்கின்ற, முந்தரி மற்றும் திராட்சையை இதில் சேர்க்கவும். வாசனைக்காக இதில் பொடி செய்து வைத்திருக்கும் ஏலக்காயை சேர்க்கவும். பிறகு மேற்புறம் குங்குமப்பூவை தூவி ஜவ்வரிசி சேமியா பால் பாயாசத்தை அழகு படுத்தவும்.

தேங்காய் பூ ரவா லட்டு:

அருந்துவதற்கு ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம் இருந்தா போதுமா? கடித்து உண்பதற்கு தேங்காவை பூ ரவா லட்டு உங்கள் பூஜைக்கும்,வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் மகிழ்ச்சியை தரும். தேங்காய் பூ ரவா லட்டு தயாரிப்பதற்கு,ரவை 1/4 கிலோ, பெரிய தேங்காய் துருவியது ஒன்று, முந்திரி பருப்பு 100 கிராம், பாதாம் 50 கிராம்,பிஸ்தா 50 கிராம், ஏலக்காய் 10, திராட்சை 50 கிராம்,நாட்டுச் சர்க்கரை அரை கிலோ

முதலில் ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். சிறிது நெய் விட்டு  திருவியியல்  தேங்காய் பூவை அதில் போட்டு  ஈரப்பதம் நீங்க வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு நெய் விட்டு,முந்திரி பயிறு,பாதாம், பிஸ்தா மற்றும் திராட்சை என அனைத்தையும் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.பின்னர் நாட்டு சர்க்கரையை தண்ணீர் விட்டு, நன்றாக பாகுபதத்திற்கு காய்ச்சவும். பின்னர் இதில் வறுத்து எடுத்து வைத்திருக்கின்ற ரவை,தேங்காய் தூள்,பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரி என அனைத்தையும் போட்டு நன்றாக கெட்டியான பதத்திற்கு கிளறவும்.

கெட்டியாக இருக்கும் இந்த கலவையை,மிதமான சூட்டில்  நெய்யை தொட்டு சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.இந்த உருண்டைகளை ஆறவைத்து எடுத்து வைத்துக் கொண்டால் சுவையான பூஜைக்கு ஏற்ற தேங்காய் பூ  லட்டு தயாராகிவிடும்.

இவ்வாறு நவராத்திரியில் வீடுகளில் அருந்துவதற்கும், உண்பதற்கமான இனிப்புகளை தயார் செய்து, துர்க்கைக்கு படைப்பதோடு,வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உண்ண கொடுத்து மகிழ்ந்திருப்போம்

Published at : 01 Oct 2022 10:59 AM (IST) Tags: 2022 Sweets Navratri Festive Homemade Flavour Mood

தொடர்புடைய செய்திகள்

தின்ன தின்ன திகட்டாத திருநெல்வேலி சொதிக்கு ஈடேது மக்களே! வாங்க செஞ்சு அசத்துவோம்..!

தின்ன தின்ன திகட்டாத திருநெல்வேலி சொதிக்கு ஈடேது மக்களே! வாங்க செஞ்சு அசத்துவோம்..!

Tomato Dosa: தோசை பிரியரா? உடுப்பி ஸ்டைல் தக்காளி தோசை - ரெசிபி இதோ!

Tomato Dosa: தோசை பிரியரா? உடுப்பி ஸ்டைல் தக்காளி தோசை - ரெசிபி இதோ!

Paneer Pulao: புரதச் சத்து நிறைந்த பனீர் புலாவ் - ரெசிபி இதோ!

Paneer Pulao: புரதச் சத்து நிறைந்த பனீர் புலாவ் - ரெசிபி இதோ!

Immunity booster Juice:நோய் எதிர்ப்பு மண்டலம் சீராக இயங்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க!

Immunity booster Juice:நோய் எதிர்ப்பு மண்டலம் சீராக இயங்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க!

Summer Drink: கோடைக்கு ஏற்ற குளுகுளு மாம்பழம், இளநீர் ஜூஸ் ரெசிபி!

Summer Drink: கோடைக்கு ஏற்ற குளுகுளு மாம்பழம், இளநீர் ஜூஸ் ரெசிபி!

டாப் நியூஸ்

T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!

T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!

Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!

Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!

“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்

“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்

Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..

Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..