Hamas Vs Israel: “நாங்களும் ஏத்துக்கறோம்“; பேச்சுவார்த்தைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஹமாஸ் - முடிவுக்கு வரும் காசா போர்?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொன்னதுபோல், 24 மணி நேரத்தில், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.? ஆனால், அது ட்ரம்ப்பின் முன்மொழிவிற்கு இல்லை. என்ன விவரம் என்று பார்க்கலாம்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை நிறுத்தும் வகையில், முதற்கட்டமாக 60 நாட்கள் போர் நிறுத்தத்திற்கான இறுதி முன்மொழிவு ஒன்றை கொடுத்துள்ளதாகவும், அதற்கான ஹமாஸ் அமைப்பின் பதில் 24 மணி நேரத்தில் தெரிந்துவிடும் என்று, நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார். அதேபோல், தற்போது பேச்சுவார்த்தைக்கு தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஆனால், அங்கு தான் ஒரு ட்விஸ்ட். ஹமாஸ் கூயியுள்ளது, ட்ரம்ப்பின் முன்மொழிவிற்கு இல்லை. பிறகு எதற்கு தெரியுமா.? வாருங்கள் பார்க்கலாம்.
ஹமாஸின் அறிவிப்பு என்ன.?
எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் கொடுத்த போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாகவும், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் ஹமாஸ் அறிவித்துள்ளது. ஆனாலும், முழுமையான போர் நிறுத்தத்தையே ஹமாஸ் விரும்புவதாக தெரிகிறது.
இது குறித்து தெரிவித்துள்ள, போர்நிறுத்தத்தை அமலுக்கு கொண்டுவருவதற்கு, ஹமாஸ் பேச்சுவார்த்தையில் உடனடியாக ஈடுபட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், அமல்படுத்துவதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாக இல்லை என கூறப்படுகிறது.
அதேபோல், 60 நாட்கள் பேர் நிறுத்தத்திற்காக, அமெரிக்க அதிபர் கொடுத்த இறுதி முன்மொழிவு குறித்து ஹமாஸ் எதுவும் குறிப்பிடவில்லை. அதனால், அதை ஏற்றுக்கொண்டார்களா, இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை.
ட்ரம்ப் நேற்று என்ன கூறினார்.?
சில நாட்களுக்கு முன்னர், 60 நாட்கள் போர் நிறுத்தத்திற்கான தனது முன்மொழிவையும், அதற்கான நிபந்தனைகளையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். அந்த முன்மொழிவை, அமைதிக்கான இறுதி முன்மொழி என குறிப்பிட்டிருந்தார் ட்ரம்ப்.
இந்த நிலையில், இந்த முன்மொழிவிற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டதா என அவரிடம் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ட்ரம்ப், “என்ன நடக்கிறது என்று பார்க்கலாம், இன்னும் 24 மணி நேரத்தில் ஹமாஸின் முடிவு தெரியவரும்“ என்று கூறியிருந்தார்.
ஹமாஸ் நினைப்பது என்ன.?
இதனிடையே, ட்ரம்ப்பின் ஒப்பந்தம், இஸ்ரேல் - காசா இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவரும் உத்தரவாதத்தை அளிக்குமா என ஹமாஸ் கேட்டுள்ளது. அப்படி இருந்தால் தான், பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும் ஹமாஸ் கூறுகிறது.
ஒருபுறம் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், நேற்று முன்தினம் கூட, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தை நடத்தினாலும் போர் முடிவுக்கு வருமா என்ற சந்தேகம் ஹமாஸிற்கு இருந்து வருகிறது.
ஏனென்றால், கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறிவிட்டதாக ஹமாஸ் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தது. ஆனால், ஹமாஸ் தான் சொன்னபடி பிணைக் கைதிகளை விடுவிக்கவில்லை என இஸ்ரேல் குற்றம் சாட்டி, மீண்டும் தாக்குதல்களை நடத்தியது.
இப்படி இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவருவதாலேயே, இந்த முறை முழுமையான போர் நிறுத்தம் ஏற்படுமா என ஹமாஸ் கேட்கிறது. இதற்கு யார் பதிலளிக்கப் போகிறார்கள் என தெரியவில்லை.
இதனிடையே, அடுத்த வாரம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவிற்கு சென்று, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்து பேச உள்ளார். அதனால், அடுத்த வாரம் போர் நிறுத்தம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.






















