PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
Anbumani vs Ramadoss: எனது பெயரை பயன்படுத்த கூடாது என ராமதாஸ் பேசியிருந்த நிலையில்,அவர் இல்லாத நேரத்தில் அன்புமணி தைலாபுரம் சென்று இருப்பது பாமக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று நடந்த பாமக கூட்டத்தில் பேசிய போது அன்புமணி தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என்று பேசி இருந்தார். இந்த நிலையில் ராமதாஸ் இல்லாத நேரத்தில் தைலாபுரம் இல்லத்திற்கு அன்புமணி சென்றுள்ளது பாமக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது
அன்புமணி vs ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து முரண்பாடு காரணமாக பாமகவில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ஆதரவாளர்களை தொடர்ச்சியாக நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார் இந்த நிலையில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நிர்வாக குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழுவை நடத்தி வருகின்றனர்.
என் பெயரை போடக்கூடாது:
பாட்டாளி மக்கள் கட்சியின் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று கும்பகோணம் நடைபெற்றது இதில் மருத்துவர் ராமதாஸ் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது. எனது இனிஷியிலை பயன்படுத்திக் கொள்ளலாம் எனது பெயரை பயன்படுத்த கூடாது என தெரிவித்தார்.உங்கள் கூட்டத்தில் அன்புமணி புகைப்படம் இடம்பெற்றுள்ளது என செய்தியாளர்கள் கேட்டதற்கு தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ம.க. ஸ்டாலினின் பாசம் விடமில்லை என்றார்.
இரண்டாக உள்ள பாமக தலைமை ஒன்றாக இணைந்தால் கண்ணுக்கு நன்றாக இருக்கும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச் ராஜா தெரிவித்துள்ளார் என கேட்டதற்கு , அது அவரது ஆசை என்றார். அந்த ஆசை நிறைவேறுமா? என மீண்டும் கேட்டதற்கு போகப் போகத் தெரியும் என பாட்டு பாடினார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பீர்கள் என கேட்டதற்கு அதற்கும் போகப் போக தெரியும் என பாட்டு பாடி பேட்டியை நிறைவு செய்தார்.
மாறி மாறி கூட்டம்:
நேற்று முன்தினம் , ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டமும், அன்புமணி தலைமையில் பாமக முக்கிய நிர்வாகிகள் கூட்டமும் நடைபெற்றது. ராமதாஸ் நடத்திய கூட்டத்தில், கட்சியின் முடிவுகளை எடுக்க அவருக்கே முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ராமதாஸின் பேச்சுக்கு கட்டுப்படாத அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தனது செயலுக்கு அன்புமணி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என கேட்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனிடையே, ராமதாஸின் செயற்குழு கூட்டம் செல்லாது என்றும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது என, அன்புமணி நடத்திய நிர்வாகிகள் கூட்டத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தைலாபுரத்தில் அன்புமணி:
இந்த நிலையில் தனது இனிஷியிலை பயன்படுத்திக் கொள்ளலாம் எனது பெயரை பயன்படுத்த கூடாது என ராமதாஸ் பேசியிருந்த நிலையில்,அவர் இல்லாத நேரத்தில் அன்புமணி தைலாபுரம் சென்று இருப்பது பாமக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















