Ajwain Leaves | இந்த காய்ச்சல் காலத்துல, இது ரொம்ப முக்கியம்.. கற்பூரவல்லி இலையை இப்படி யூஸ் பண்ணுங்க..
சட்னியாகவோ நன்றாக அடுப்பில் காயவிட்டோ ஓம இலைகள் அல்லது கற்பூரவல்லி இலைகளை சாப்பிட்டுப் பாருங்கள்
ஓம இலைகள் அல்லது கற்பூரவல்லி இலைகள் சளிக்கு அருமருந்து என்பது அனைவருக்கும் தெரிந்த தகவல். ஆனால், ஜீரணத் தொந்தரவுகளுக்கும் வாயுத் தொல்லைக்கும் அவை அருமருந்து. ஓம இலைகளை எவ்வாறு உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்பதைப் பார்க்கலாம்.
- ஓம இலைகளை சட்னியாக அரைத்து காலை உணவிலோ மதிய நேரத்திலோ சாப்பிடலாம். எதிர்ப்புத் திறனை ஊக்குவிக்க, சீரணக் குறைபாடுகளைக் குறைக்க உதவும்.
- தொடர்ந்து வயிறு உப்புசம், வாயுத் தொல்லைகள் இருந்தால் ஓம இலைகளைக் குளிக்கும் சுடு நீரில் கலந்து தினமும் குளிக்கலாம்.
- ஓம இலைகளைத் தோசைக் கல்லில் நன்கு வறுத்து மாலை தேநீருடன் எளிய உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
- ஓம இலைகளை சுடுநீரில் போட்டு, சிறிது சீரகம், தேன், மஞ்சள் தூள் கலந்து பருகுவது உடலுக்கு மிகவும் நல்லது. சளி, இருமல் தொல்லைகள் நீங்கும், எதிர்ப்புத் திறன் வலுவுறும்.
- காய்கறி சூப்போ சாரோ தயாரிக்கும்போது அவற்றில் ஓம இலைகளை கலந்து கொள்ளலாம்.
- உங்களுக்கு சீரணத் தொல்லை என்பது உடன் வரும் தொந்தரவாகத் தொடர்ந்து இருந்தால் ஓம இலைகளை தினம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்ல பயன் கிடைக்கும்.
- வைரஸ், பூஞ்சை, பேக்டீரியா தொற்றுகளிலிருந்து காக்கும் தன்மை ஓமத்திற்கு உண்டு, ஆதலால் தாளிக்கும்போது, ரசத்தில், பருப்பில், கூட்டில் கலந்து கொள்ளலாம்.
- வாயுத் தொல்லைகளுக்கு, உப்புசத்திற்கு ஓம விதைகள் அருமருந்து. அவற்றை வெறும் வாயில்போட்டு மென்று உண்பது நல்லது. சுடு நீரில் கலந்து கொதிக்க விட்டு அந்த நீரைப் பருகலாம். சிறிது உப்பிட்டு உணவில் கலந்து கொள்ளலாம், வெறுமனே கூட உண்ணலாம், உடலுக்கு மிகவும் நல்லது.
மேலும் லைஃப்ஸ்டைல் செய்திகளைப் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்