Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
தாடையில் ஏற்படும் வலி மாரடைப்பின் அறிகுறியாகவும் இருக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவ உலகு தெரிவிக்கின்றது.
தாடையில் ஏற்படும் வலி மாரடைப்பின் அறிகுறியாகவும் இருக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவ உலகு தெரிவிக்கின்றது.
ஒருவருக்கு திடீரென தாடையில் சுரீர் என்று வலி ஏற்பட்டால் அவர் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும் என எச்சரிக்கிறது மருத்துவ உலகு. தாடை வலிக்கும் மாரடைப்புக்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பை இந்தக் கட்டுரையில் காண்போம்.
மாரடைப்பு வரும் பின்னே தாடை வலி வரும் முன்னே..
தாடை வலி வரும் அனைவருக்குமே மாரடைப்பின் அறிகுறி என்று கூற இயலாது. அதை மருத்துவர் தான் உறுதிப்படுத்துவார். மாரடைப்பு வரும்போது ஒருவருக்கு நெஞ்சு வலியுடன், தாடை, முதுகு, இரு கைகள், கழுத்து, வயிற்றுப் பகுதிகளில் கடுமையான வலி ஏற்படலாம். அதேபோல் தாடை வலி ஏற்படும்போது அதை அலட்சியப்படுத்தக் கூடாது.
மாரடைப்பு கூடுதல் அறிகுறிகள்:
* குமட்டல்
* வியர்வையோடு உடல் குளிர்ந்துபோதல்
* தலைச்சுற்றல்
இவற்றுடன் தாடை வலியும் ஏற்படும்போது அதை அலட்சியப்படுத்தவே கூடாது.
பெண்கள், ஆண்கள் அறிகுறிகளில் மாற்றம் ஏற்படுமா?
மாரடைப்புக்கான எச்சரிக்கை அறிகுறிகள் ஒவ்வொரு தனிமனிதருக்கும் வித்தியாசப்படுகிறது. அதுவும்போல் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையேயும் கூட வித்தியாசப்படுகிறது.
* தாடை வலி, * மூச்சுத் திணறல், * வாந்தி, குமட்டல் ஆகியன பெண்களுக்கே அதிகமாக ஏற்படுகிறது.
மாரடைப்பின் அறிகுறியைத் தாண்டியும் சில நேரங்களில் தாடை வலி பிற நோய்களினாலும் ஏற்படும். காயம், ஆர்த்திரிட்டிஸ், பல் நோய் ஆகியனவற்றாலும் தாடை வலி ஏற்பாடலாம்.
டிஎம்ஜெ நோய் (TMJ disorders)
TMJ என்பது முகத்தையும், தாடையையும் இணைக்கும் இடம். இதுதான் ஒருவர் பேச, கொட்டாவி விட, மென்று உண்ண உதவுகிறது. TMJ வில் சிக்கல் ஏற்பட்டால் தாடை தசைகளில் இறுக்கம் ஏற்படலாம், தாடையில் ஒருவகையான வலியுடன் கூடிய சத்தம் வரலாம், முகம், கழுத்தும் சேர்ந்தே வலிக்கலாம். அத்துடன் தாடையை முழுமையான அளவுக்கு இயக்க முடியாமல் போகலாம்.
நியூரால்ஜியா:
இது நியூரால்ஜியா என்ற பிரச்சினையும் வரலாம். இது நரம்பியல் கோளாறு. நரம்பு சேதமடைந்தால் இது ஏற்படலாம். தாடையைத் தாக்கும் நியூரால்ஜியாவுக்கு ட்ரைஜெமினல் நியூரால்ஜியா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது ட்ரைஜெமினல் நரம்பைப் பாதிக்கிறது. ட்ரைஜெமினல் நியூரால்ஜியா ஏற்படும்போது மின்சாரம் பாய்ந்தது போல் முகத்தில் வலி ஏற்படுமாம்.
ப்ரக்சிஸம் (Bruxism)
ப்ரக்சிஸம் என்பது, ஒருவர் தனது பற்களைக் கடித்து அதை அறவை இயந்திரம் போல் அறைப்பதாகும். பெரும்பாலும் விழித்திருக்கும்போதே இந்த பற்களைக் கடிக்கும் பழக்கம் இருக்குமென்றாலும் சிலருக்கு தூக்கத்திலும் பற்களைக் கடிக்கும் பழக்கம் இருக்கும்.
டெம்போரல் ஆர்டெரிட்டிஸ் (Temporal Arteritis)
டெம்போரல் ஆர்டெரிட்டிஸ் என்ற பாதிப்பு ஏற்படும் போது தலைப்பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் பாதிக்கப்படுகின்றன. இது தாடை வலியை ஏற்படுத்தும். குறிப்பாக ஒருவர் உணவு உண்ணும் போது வலி அதிகமாக இருக்கும். இதனால் ஒருபக்க பார்வையிழப்பு ஏற்படலாம். அயர்ச்சி, காய்ச்சல், எடை குறைப்பு, தலைவலி, உடல் வலி, கழுத்தில் இறுக்கம், இடுப்பு, தோள்பட்டையில் வலி, வறட்டு இருமல் ஆகியன ஏற்படும்.
மொத்தத்தில் தாடை வலி என்பது மாரடைப்பின் அறிகுறிகளில் ஒன்று. ஆனால் எல்லா தாடை வலியும் மாரடைப்புக்கான அறிகுறி அல்ல. தாடை வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது. அவர், உங்களை பரிசோதித்து அது மாரடைப்பால வருவதா இல்லை வேறேதும் பிரச்சினையால் வருவதா என்று யோசித்து முடிவு சொல்வார்கள்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )