முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
முடி வளர்ச்சி என்பது, முடி உதிர்தல் என்பது ஒரு சுழற்சியாக நடைபெறும். பொதுவாக முடி வளர்வது தனியாக கவனிக்க முடியாது. ஆனால் முடி உதிர்வது, அனைவருக்கும் தெரியும்.
முடி வளர்ச்சி என்பது, முடி உதிர்தல் என்பது ஒரு சுழற்சியாக நடைபெறும். பொதுவாக முடி வளர்வது தனியாக கவனிக்க முடியாது. ஆனால் முடி உதிர்வது, அனைவருக்கும் தெரியும். இதனால் பெரும்பாலோனோர் முடி உதிர்கிறது என்பது மட்டும் தான் தெரியும். முடி கொட்டுகிறது, என புலம்பாமல் சரி போகட்டும் என இருப்பவர்கள் மிகவும் குறைவு முடி உதிர்ந்தாலே கட்டாயம் கவலையும் சேர்ந்து வந்துவிடும். கவலை படாதீர்கள், தினம் ஒரு 100 முடி உதிர்வது மிகவும் இயற்கையானது. முடி உதிர்வது மிகவும் பொதுவானது.
முடியில் மூன்று வளர்ச்சி நிலைகள் இருக்கிறது. அனாஜன் எனும் வளரும் பருவம், காட்டாஜன் எனும் முடி உதிரும் பருவம், டீலாஜன் எனும் முடி ஓய்வு எடுக்கும் பருவம் போன்ற பருவ நிலைகள் இருக்கிறது.
அனாஜன் எனும் வளரும் பருவம், இந்த பருவத்தில் புதிதாக முடி வளர ஆரம்பிக்கும்.தினமும் சராசரியாக அரை மில்லிமீட்டர் அளவுக்கு முடி வளரும். இந்த முடி வளர்ச்சி பருவம் 3 முதல் 7 ஆண்டுகள் வரை நீடிக்கும்.
காட்டாஜன் எனும் முடி உதிரும் பருவம், இந்த பருவத்தில் முடி உதிரும் பருவம். தினமும் சராசரியாக 100 முடி வரை உதிரும். தலையில் அவ்வளவு தான் முடி இருக்கிறது என்று சொல்லாதீர்கள். தலையில் 1 லட்சத்திற்கு அதிகமான முடிகள் இருக்கிறது.
டீலாஜன் எனும் முடி ஓய்வு எடுக்கும் பருவம் இது சுமார் 2 -4 மாதங்கள் வரை நீடிக்கும்
இந்த 3 சுழற்சியில் தான் முடியின் வளர்ச்சி, மற்றும் முடி உதிர்தல் நடக்கும்.
ஒவ்வொரு முடியும் ஒவ்வொரு பருவத்தில் இருக்கும். அதனால் முடி உதிர்ந்து மீண்டும் அதே இடத்தில் புதிய முடி வளரும். ஒரு இடத்தில் முடி உதிர்ந்து அடுத்த சுழற்சியில் மீண்டும் முடி வளர ஆரம்பிக்கும்.
இது இயற்கையாக நடக்க கூடியது. இதற்காக எந்த மெனக்கெடல் செய்ய வேண்டியது இல்லை. அளவுக்கு அதிகமாக முடி உதிர்வது தான் பிரச்சனையை தரும். முடி உதிர்வதும், நோய்களின் அறிகுறியாக இருக்கும். உதாரணமாக ஹார்மோன் குறைபாடுகளுக்கு முடி உதிர்தல் ஒரு முக்கியமான அறிகுறியாக இருக்கிறது.
முடி உதிர்ந்து முழுக்க வழுக்கையாக இருப்பதற்கு மூன்று முக்கிய காரணிகள் இருக்கிறது. அதாவது வயது, பரம்பரை, ஆன்ட்ரோஜன் ஹார்மோன் ஆகிய மூன்றும் தான் ஒருவருக்கு வழுக்கையாக காரணமாக இருக்கிறது. ஆண்களுக்கு மட்டும் தான் வழுக்கை ஆகும்.பெண்களுக்கு முடி வழுக்கை ஆவது மிகவும் குறைவு. அதீத மனஅழுத்தம், போதிய ஊட்டச்சத்து இல்லாமை போன்ற காரணங்களாலும் முடி அதிகமாக உதிர ஆரம்பிக்கும்.