Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 10,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,448 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது. தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,14,335 ஆக சரிந்துள்ளது. ஒருநாள் கொரோனா இறப்பு எண்ணிக்கை 270. சிகிச்சை முழுமையாகப் பெற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 21,058-ஆக உள்ளது.
கர்நாடகாவில் 5,983 பேருக்கு இன்று கொரோனா
கர்நாடகாவில் புதியதாக இன்று 5 ஆயிரத்து 983 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணி்கை 27 லட்சத்து 90 ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 10 ஆயிரத்து 685 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 138 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 33 ஆயிரத்து 434 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
தமிழ்நாட்டில் நேற்று 10 ஆயிரத்து 448 என்று தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகிய நிலையில், இன்று 9 ஆயிரத்து 118 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது. இன்று மட்டும் 210 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கோவையில் 1,227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 22 ஆயிரத்து 720 பேர் குணம் அடைந்துள்ளனர்.
டெல்லியில் புதியதாக 158 பேருக்கு கொரோனா
கொரோனா இரண்டாம் அலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா தாக்கம் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இன்று மட்டும் டெல்லியில் புதியதாக 158 நபர்களுக்கு கொரோனா பாதிப்ப உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் கொரோனா வைரசால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் தற்போது 2 ஆயிரத்து 554 நபர்கள் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு
தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனாவால் தனிமைப்பபடுத்தப்பட்ட பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், தடுப்பூசி முகாமையும் தொடங்கி வைத்து மக்களுக்கு அறிவுரை கூறினார்.
இந்தியாவில் 9 நகரங்களில் பயன்பாட்டில் உள்ள ஸ்புட்னிக்வி தடுப்பூ
ரஷ்யாவில் கொரோனா வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்ஷின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியாவிலும் ஸ்புட்னிக்வி தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதையடுத்து, கடந்த மே மாதம் முதல் பயன்பாட்டில் உள்ள ஸ்புட்னிக் தடுப்பூசி ஹைதராபாத், மும்பை, பெங்களூர், கொல்கத்தா, சென்னை, டெல்லி உள்பட 9 நகரங்களில் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் செலுத்தப்பட்டு வருகிறது.