TVK Transgender Issue | ”9-ஆடா நாங்க?...இன்னும் எத்தனை நாளைக்கு..” SURRENDER ஆன தவெக! | Vijay
விஜய் திருநர்கள் அணியை வரிசை எண் 9 இல் தவெக வரிசைப்படுத்தி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 9ஆம் இடத்தில் பட்டியல் செய்ய வேண்டிய தேவை என்ன? 9 என்னும் இழிவை நாங்கள் தூக்கி சுமக்க வேண்டும்? என்று திருநர்கள் இயக்க செயல்பாட்டாளர் லிவிங் ஸ்மைல் வித்யா கண்டனம் தெரிவித்த நிலையில் தவெக மன்னிப்பு கேட்டுள்ளனர்.
2026 தேர்தலை குறிவைத்து வேலைகளை ஆரம்பித்துள்ள விஜய் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை நேரில் சந்தித்தது அரசியல் களத்தை பரபரப்பாக்கியது. பின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் வீட்டில் வைத்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் பிரசாந்த் கிஷோரை நேரில் சந்தித்து முக்கிய மீட்டிங் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்தநிலையில் தவெகவில், ஊராட்சி அளவில் தொடங்கி, மாவட்ட அளவில் என்னென்ன கட்டமைப்புகளும் அணிகளும் இருக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள 28 அணிகள் குறித்த பட்டியலை நேற்று வெளியிட்டனர். இதில் மூன்றாம் பாலினத்தவர், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, இளைஞர் அணி, குழந்தைகள் அணி உள்ளிட்ட அணிகள் வரிசையாக இடம்பெற்றுள்ளன. இதுவரை வேறு எந்தக் கட்சியிலும் இல்லாத புதுப்புது அணிகள் தவெகவில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இதில் மூன்றாம் பாலினத்தவர், அணியை வரிசை எண் 9 இல் தவெக வரிசைப்படுத்தி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாற்று பாலினத்தவர் சமூக செயற்பாட்டாளர் லிவிங் ஸ்மைல் வித்யா தனது எக்ஸ் பக்கத்தில் விஜய்க்கு எதிராக கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். அதில், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தாண்டா இந்த “9” என்னும் இழிவை நாங்கள் தூக்கி சுமக்க வேண்டும்? நடிகர் விஜய் மூன்றாம் பாலினத்தவர் அணி என்று துவக்கியிருப்பது நல்ல விசயம். மீண்டும் மீண்டும்! இந்த அவதூறு வார்த்தை. அதை 9ம் இடத்தில் லிஸ்ட் செய்ய வேண்டிய தேவை என்ன? இந்த படத்தில் வருவது போன்ற டார்க் ஜோக்கை உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள் விஜய்ண்ணா! இதையும் நாங்களே தான் மாரிலும், வயித்திலும் அடித்து கேட்க வேண்டும். தமிழ்கூறும் அறிவுஜீவுகள் கொஞ்சம் சேர்ந்து நில்லுங்க ப்ளீஸ்!
இவரது இந்த பதிவு பலரது கவனம் பெற அரசியல் களத்தில் விஜய் அவரது கட்சியினர் செய்யும் எந்த ஒரு விஷயத்தைச் செய்தாலும் ஆராய்ந்து கவனத்துடன் செய்ய வேண்டும் என இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் லிவிங் ஸ்மைல் வித்யாவின் இந்த பதிவுக்கு சில தவெக இணையவாசிகள் இது தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளனர். அதில் காயப்படுத்தும் எண்ணத்தோடு இது கட்டாயம் நடந்திருக்காது, இது கவனக்குறைவால் ஏற்பட்டுள்ளது. மன்னிக்கவும். இது போல இனி ஏற்படாது. என மன்னிப்பு கேட்டுள்ளனர்.
விளக்கத்திற்கு மிக்க நன்றி . வணங்குகிறேன். அதேவேளையில் தொடர்ந்து என்னை தரக்குறைவாக பேசும் கட்சி தொண்டர்களிடம் கண்ணியமாக விமர்சிக்க சொல்லவும். புரிதலுக்கு நன்றி என லிவிங் ஸ்மைல் வித்யா தெரிவித்துள்ளார்.





















