மேலும் அறிய

PM Modi On Pakistan: பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்த மோடி.! 46 நிமிடங்கள் விமானத்தில் இருந்தே விசிட்...

PM Modi-Pakistan: பிரதமர் மோடி, பிரான்சில் நடைபெற்ற ஏ.ஐ மாநாட்டில் பங்கேற்க செல்லும்போது, பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்து சென்றார். இதற்கு, முன்பு பிரதமருக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்தியாவின் அண்டை நாடும், மிகவும் சர்ச்சைக்குரிய உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ள நாடுமான பாகிஸ்தான் நாட்டின் எல்லைக்குள், பிரதமர் மோடி சுமார் 46 நிமிடம் பறந்து சென்று, பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றடைந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், என்ன நடந்தது, எதனால் பிரதமர் மோடிக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது, என்பது குறித்து பார்ப்போம்.

பிரதமர் வெளிநாட்டு பயணம்:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நான்கு  நாட்கள் வெளிநாட்டு பயணமாக பிரான்ஸ் மற்றும் அமரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில், முதல் பயணத் திட்டமாக, கடந்த திங்கள் கிழமை ( பிப். 10 ), இந்தியாவிலிருந்து, இந்தியா 1 என்கிற  விமானத்தின் மூலம் , புதுதில்லியில் இருந்து பாரிஸ் நாட்டிற்குச் சென்றார். அங்கு ஏஐ மாநாட்டில் பங்குபெற்று, சிறப்புரையாற்றினார். 

இந்நிலையில், பாரீஸ்க்குச் செல்லும் வான் வெளியில், பாகிஸ்தான் வான் வெளியில் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் பிரதமர் மோடி:

பிரதமர் மோடியின் இந்தியா 1 விமானமானது, பாகிஸ்தானின் ஷேகுபுரா, ஹபிசாபாத், சக்வால் மற்றும் கோஹட் ஆகிய பகுதிகளின் மேற்பரப்பில் பறந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து போது, சுமார் 46 நிமிடங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறந்ததாக கூறப்படுகிறது. 

ஆப்கானிஸ்தான் வான்வெளிப் பாதையை மூடியதால், இந்தியப் பிரதமரின் விமானத்திற்கு, பாகிஸ்தான் அனுமதி வழங்கியதாக சிவில் ஏவியேஷன் வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏ.ஆர்.ஒய் செய்தி  நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவுடனான மோதலால், கடந்த 2019ல் இந்தியாவுக்கு பாகிஸ்தான் வான்வெளியானது மூடப்பட்டு இருந்தது.  இதையடுத்து கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு, மார்ச் 2019 இல், பாகிஸ்தான், சிவிலியன் விமானங்களுக்கான அனைத்து வான்வெளி கட்டுப்பாடுகளையும் நீக்கியது, அதன் எல்லையில் ஒரு முக்கியமான போக்குவரத்து விமான வழித்தடத்தையும் மீண்டும் திறந்தது.

Also Read: Deepseek AI: ஷாக்கில் டிரம்ப்! வரி நெருக்கடிக்கு டீப்சிக் ஆயுதத்தை எடுத்த சீனா! ஒரே நாளில் ரூ5 லட்சம் கோடி நஷ்டம்

பாகிஸ்தான் - இந்தியா மோதல்:

கடந்த 2019ம் ஆண்டில், புல்வாமாவில் இந்திய பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் எல்லைக்குள், இந்திய விமானப்படை சென்று ஊடுறுவல்காரர்கள் மீது பதில் தாக்குதல் தாக்கியது. இதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் சரத்து 370 ரத்து செய்யப்படட்து மட்டுமன்றி, மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்வினையாற்றியது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பிரச்னைகளால், பொருளாதார தடைகளையும் இந்தியாவால் ஏற்படுத்தப்பட்டன. அப்போது , பிரதமர் மோடி ஜெர்மனி பயணத்தின் மோது , பாகிஸ்தான் தனது வான்வெளி பயன்படுத்த தடை விதித்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன. 

இந்த தருணத்தில், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவுடன் மோதல் பிரச்னைகளில் நீடித்து வரும் நாடாக பார்க்கப்படும் பாகிஸ்தான் நாட்டின்,  வான் வெளியில் சுமார் 46 நிமிடங்கள், 36,000 அடி உயரத்தில் பறந்து சென்றது, பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.  

Also Read: Israel Hamas Ceasefire: டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
Embed widget