Senthil Balaji Case: செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கனுமா? உச்சநீதிமன்றம் சராமரி கேள்வி?
Senthil Balaji Case: செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால், சாட்சியாளர்களாக இருக்கும் 212 அரசு ஊழியர்கள், பயப்படுகிறார்களா என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

செதில் பாலாஜி ஜாமீன் மனுவை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் , உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அப்போது, செந்தில் பாலாஜி அமைச்சராக தொடராக வேண்டுமா?, என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினர். அமைச்சராக தொடர விரும்பினால் முன்னுரிமை கொடுத்து வழக்கை விசாரிக்கலாம் எனவும் தெரிவித்தனர் . செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால், சாட்சியாளர்களாக இருக்கும் 212 அரசு ஊழியர்கள், பயப்படுகிறார்களா என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
செந்தில் பாலாஜி வழக்கு:
தமிழ்நாட்டின் திமுக அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி , பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2011-2016 ஆம் ஆண்டு காலத்தில், செந்தில் பாலாஜி தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றதாகவும், பணம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏதும் தரவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை கைது செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணை வழங்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்ப்பட்டது. அங்கு பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
செந்தில் பாலாஜி ஜாமீன்:
பலமுறை பிணை மறுக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டு 471 நாட்களுக்கு பிறகு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும், அவருக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் இருவர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும், வாரத்த்தில் இரண்டு தினங்கள் - திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளைக் கலைக்கக் கூடாது; வழக்கில் வாய்தா கேட்கக் கூடாது போன்ற நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்தது.
ஜாமீனை எதிர்த்து வழக்கு:
இதையடுத்து, சிறையிலிருந்த வெளியே வந்த செந்தில் பாலாஜி, மீண்டும் தமிழ்நாட்டின் அமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில் செதில் பாலாஜி அமைச்சராக இருப்பதால், ஜாமீன் மனுவை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் , உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
அப்போது, செந்தில் பாலாஜி அமைச்சராக தொடராக வேண்டுமா, என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழ்நாடு அரசிடம் கேட்டுச் செல்லுங்கள் என, செந்தில் பாலாஜி தரப்பிடம் தெரிவித்தன.
அமைச்சராக தொடர விரும்பினால், இந்த வழக்கை முன்னுரிமை கொடுத்து விசாரிக்கலாம் எனவும் தெரிவித்தனர் . செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால், சாட்சியாளர்களாக இருக்கும் 212 அரசு ஊழியர்கள், பயப்படுவார்கள் என்றும், என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆகையால், செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை ரத்து செய்யுமாரு மனுதாரர் தெரிவித்தார். இந்நிலையில், செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா என தமிழ்நாடு அரசிடம் கேட்டு செல்லுமாறு , வழக்கை மார்ச் 4 ஆம் தேதிக்கு , உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

