Arshdeep Singh: என் ஓவர்லயே அடிக்குறியா? அடுத்தடுத்து பவுண்டரி அடித்த டக்கெட்டை பழிவாங்கிய அர்ஷ்தீப்சிங்!
Arshdeep Singh: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தனது ஓவரில் 4 பவுண்டரிகளை தொடர்ச்சியாக விளாசிய பென் டக்கெட்டை அடுத்த ஓவரிலே அர்ஷ்தீப்சிங் அவுட்டாக்கினார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து 357 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அடுத்தடுத்து 4 பவுண்டரிகள்:
அகமதாபாத் மைதானத்தில் 357 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்காக பென் டக்கெட் - பில் சால்ட் ஆட்டத்தை தொடங்கினர். ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்காக டக்கெட் அதிரடியாக ஆடினார். குறிப்பாக, அர்ஷ்தீப்சிங் வீசிய ஆட்டத்தின் 5வது ஓவரில் பென் டக்கெட் அடுத்தடுத்து 4 பந்துகளை பவுண்டரிக்கு விளாசினார்.
பழிவாங்கிய அர்ஷ்தீப்சிங்:
இதனால், இந்திய ரசிகர்களும் களத்தில் இருந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் அதிருப்தி அடைந்தனர். பவர்ப்ளே இருந்ததும் டக்கெட்டிற்கு மிகவும் சாதகமாக இருந்தது. இதனால், இங்கிலாந்தின் ரன் ரேட்டும ஜெட் வேகத்தில் ஏறியது. ஆனால், தன்னுடைய ஓவர் அடிக்கப்பட்டதற்கு அடுத்த ஓவரிலே பழிவாங்கினார் அர்ஷ்தீப் சிங்.
Arshdeep Singh is the most dangerous bowler of India at the moment and the way he took the wickets of Phil Salt and Ben Duckett,
— Rahul Gupta (@RahulGu04197245) February 12, 2025
it seems that #JaspritBumrah will not be missed in the #ChampionsTrophy #Arshdeep#INDvsENG #INDvENG pic.twitter.com/MGHj8TGwgw
அர்ஷ்தீப் சிங் மீண்டும் வீசிய 7வது ஓவரில் பென் டக்கெட் முதல் பந்திலே ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனால், மைதானத்தில் பட்டாசாய் வெடித்த இங்கிலாந்து வீரர் டக்கெட் 22 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
திருப்புமுனை:
அதற்கு அடுத்து அர்ஷ்தீப்சிங் வீசிய ஆட்டத்தின் 9வது ஓவரில் மற்றொரு அபாயகரமான பேட்ஸ்மேன் பில் சால்ட்டை 21 பந்தில் 4 பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்கச் செய்தார். பென் டக்கெட்டின் விக்கெட்டே ஆட்டத்தில் பெரும் திருப்பு முனையாக இருந்தது.
ஏனென்றால் அவர் களத்தில் நின்றபோது இங்கிலாந்து அணி 6 ஓவர்களில் 60 ரன்களை எடுத்திருந்தது. ஓவருக்கு 10 ரன்களை எடுத்துக் கொண்டிருந்தனர். அவரை விரைவில் அவுட்டாக்காமல் இருந்தால் இந்திய அணிக்கு இந்த போட்டி சவால் மிகுந்ததாக மாறியிருக்கும். அதன்பின்னரே இந்திய வீரர்கள் பந்துவீச்சில் மிரட்டி விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்த போட்டியில் அர்ஷ்தீப்சிங் 5 ஓவர்கள் வீசி 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார். இன்னும் ஒரு வாரத்தில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக அர்ஷ்தீப்சிங் உள்ளார். பும்ரா இல்லாத சூழலில் அவர் முக்கிய பந்துவீச்சாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

