அந்த மூன்று நாட்கள் கொடூர வலியா? இந்த 7 ப்ராடக்டஸ் பயன்படுத்திப் பாருங்களேன்!
பெண்ணாய்ப் பிறந்துவிட்டால் பூப்பெய்த நாள் தொட்டு மெனோபஸை அடையும் வரை ஒவ்வொரு பெண்ணும் மாதவிடாயை சந்தித்துத் தான் ஆக வேண்டும்.
பெண்ணாய்ப் பிறந்துவிட்டால் பூப்பெய்த நாள் தொட்டு மெனோபஸை அடையும் வரை ஒவ்வொரு பெண்ணும் மாதவிடாயை சந்தித்துத் தான் ஆக வேண்டும்.
ஆனால், மாதவிடாய் நாட்கள் எல்லோரையும் போல் சில பெண்களுக்கு சாதாரணமானதாக அமைந்துவிடாது. சிலர் கடுமையான அடிவயிற்று வலி, உடல் சோர்வு, மூட் ஸ்விங்கஸ் எனப்படும் உணர்வுகள் மாற்றம் ஆகியன ஏற்படுவது உண்டு. இவற்றில் இருந்து தப்பிக்க இதோ சில டிப்ஸ்.
பெயின் ரிலீஃப் பேட்சஸ்:
மாதவிடாய் காலத்தில் அடிவயிற்றில் ஏற்படும் பிடிப்பால் அவதிப்படுபவர்களுக்காகவே கடைகளில் ஹெர்பல் பேட்ச் கிடைக்கின்றன. இந்த ஹெர்பல் ஃபார்முலா கொண்ட பேட்ச் ஸ்டிக்கர் போன்று இருக்கிறது. இதனை நீங்கள் அடிவயிறு, இடுப்பு, மூட்டு ஜாயின்ட், தசைகள், கால்கள் போன்ற பகுதிகளில் ஒட்டிக் கொள்ளலாம். இந்த பேட்சில் மெந்தால் மற்றும் ஈயூகலிப்டஸ் எண்ணெய் ஆகியன இருக்கும். இதன் மூலம் வலி, எரிச்சல், வயிறு உப்புச உபாதைகள் ஆகியன குறையும். இதன் விலை ரூ.199.
ஹாட் சாக்கலேட் மிக்ஸ்:
ஹாட் சாக்கலேட் என்பதே ஒருவகை தெரபி எனலாம். இதைப் பருகுவதால் தசைப் பிடிப்புகளில் இருந்து விடுபடலாம். மேலும் இவை ஹேப்பி ஹார்மோன்களை வெளியிடலாம். இதன் விலை ரூ.245.
கட்டிப்பிடிக்க ஒரு தலையணை:
கடுள் பில்லோ எனப்படும் இந்த வகை நீளமான தலையணையை கடுமையான வலியின் போது கட்டியணைத்து உறங்கும் போது நிம்மதியான உறக்கத்தைத் தருகிறது. இது தூசியையும், பூச்சிகளையும் நம்மிடம் அண்டவிடாமல் தடுக்கிறது. இது மென்மையானதாக இருப்பதால் வலியின் போது உற்ற துணை போல் இருக்கும். இதன் விலை ரூ.749.
காஃபி பேத்திங் பார்ஸ்:
இந்த காப்பி பேத்திங் பார்ஸ், உங்களின் மனநிலையைச் சட்டென மாற்றக் கூடியது இதிலிருந்து காஃபியில் கெஃபைன் இருக்கிறது. இந்த கெஃபைன், சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடன்டாக இருக்கிறது. இது சருமத்தைப் பாதுகாக்கிறது. கடுமையான ரசாயனம் இல்லாததால், 5.5 pH உள்ளதால் சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது. இதன் விலை ரூ.675.
ஹேர் ஸ்கேல்ப் மசாஜர்
இந்த ஹேர் ஸ்கேல்ப் மசாஜர் மூலம் நீங்கள் மென்மையாக மசாஜ் செய்யலாம். இதன் மூலம், ஹேப்பி ஹார்மோன் வெளியாகும். அது மாதவிடாய் நேரத்தில் மன அழுத்தத்தில் இருந்து விடுபடச் செய்யும். இது உங்கள் கபாலத்தில் ஷேம்பூ நன்றாகப் படர்ந்து அழுக்கு, பொடுகை சுத்தம் செய்ய உதவுகிறது. இதில் உள்ள கிரிப் தரமானது. அதனால் பயன்படுத்த வசதியானது. இதன் விலை ரூ.269.
டார்க் சாக்கலேட்:
டார்க் சாக்கலேட்டுகளில் அதிகமான அளவு பொட்டாசியம் இருக்கிறது. இது மாதவிடாய் காலத்தில் உங்களின் தசை செயல்பாட்டை சீர் செய்கிறது. மாதவிடாயின்போது இனிப்பு சாப்பிட வேண்டும் என்று உந்துதலுக்கும் இது நல்ல உபாயம் செய்கிறது. இவற்றின் விலை ரூ.350.
சாஃப்ட் பில்லோஸ்:
இந்த சாஃப்ட் பில்லோ மூலம் பனி செய்யும் போது உங்கள் முதுகுக்கும் கழுத்துக்கும் இதமான உணர்வைத் தருகிறது. இவை மிக மிக மென்மையாக இருப்பதால் நீங்கள் தூங்குவதற்கும் உதவி செய்கிறது. இவற்றின் விலை ரூ.678.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )