Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Air India Plane Crash: 2025ஆம் ஆண்டில் விமான விபத்து குறித்த எனது கணிப்பை நான் இன்னும் உறுதியாகக் கொண்டுள்ளேன் - ஜோதிடர் சர்மிஸ்தா.

2025ஆம் ஆண்டில் விமான விபத்து ஏற்பட்டு, மிகப்பெரிய அழிவு ஏற்படும் என்று ஜோதிடர் சர்மிஸ்தா கணித்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத், அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில், ஏர் இந்திய விமானம் போயிங் 787, இன்று பிற்பகல் 1.17 மணி அளவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானமானது கட்டுப்பாட்டை இழந்து, மேகனி நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்தது. விமானம் புறப்பட்டு, 825 அடி உயரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
இத்தகைய விமான விபத்து குறித்து பிரபல ஜோதிடர் முன்கூட்டியே கணித்துள்ளார். இதுகுறித்து ஜோதிடர் சர்மிஸ்தா என்பவர் ’’கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், 2025 ஆம் ஆண்டில் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை சிறப்பாகச் செயல்படும். மேலும் விமான விபத்து தலைப்புச் செய்திகள் நமக்கு அதிர்ச்சியைத் தரக்கூடும், இதை இரண்டு மாதங்களுக்கு முன்பே கணித்தேன்.
விமானப் போக்குவரத்து பாதுகாப்பு இல்லாமல் இருக்கும்
நம் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்கனவே சிறிது முன்னேற்றம் தொடங்கிவிட்டது. குரு மிதுன ராசியில் மிருகசீரிஷம் மற்றும் ஆருத்ராவின் மிதுனப் பகுதியில் மாதத்திற்கு சுமார் 6.5 டிகிரி வேகத்தில் இருக்கும்போது, விமானப் போக்குவரத்து செழிக்கும், ஆனால் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும்’’ என்று கூறி இருந்தார்.
Tata will make Rafale fuselage in Hyderabad. This is just aviation expansion, ISRO will surprise the world in Space and satellite engineering, space tourism in coming two years. Predicted this last year via Nakshatra transit. I am still holding high the prediction of Plane crash… https://t.co/WjX39R7E47
— Astro Sharmistha (@AstroSharmistha) June 5, 2025
2025ஆம் ஆண்டில் விமான விபத்து நடக்கும்
இந்த ட்வீட்டை மேற்கோள் காட்டி, இதே ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி மற்றொரு பதிவை இட்டுள்ளார். அதில், ’’டாடா நிறுவனம், ஹைதராபாத்தில் ரஃபேல் விமானத்தின் உடல் பகுதியை உருவாக்கும். இஸ்ரோ விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் பொறியியல், விண்வெளி சுற்றுலா ஆகியவற்றில் இரண்டு ஆண்டுகளில் உலகையே பிரம்மிக்க வைக்கும். இது கடந்த ஆண்டு நட்சத்திரங்களின் நகர்தல் மூலம் கணிக்கப்பட்டது. 2025ஆம் ஆண்டில் விமான விபத்து குறித்த எனது கணிப்பை நான் இன்னும் உறுதியாகக் கொண்டுள்ளேன்’’ என்று ஜோதிடர் சர்மிஸ்தா கூறி இருந்தார்.
இவரின் இந்த எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.






















