Vijay Fans Meeting: 5 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு..! வெள்ளை சட்டையில் மாஸாக வந்த விஜய்..! அரசியலுக்கு அச்சாரமா...?
Actor Vijay : சென்னை பனையூரில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் சந்தித்தார்.
![Vijay Fans Meeting: 5 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு..! வெள்ளை சட்டையில் மாஸாக வந்த விஜய்..! அரசியலுக்கு அச்சாரமா...? Vijay Fans Meeting Thalapathy Vijay to Meet his fans Panaiyur House Vijay Fans Meeting: 5 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு..! வெள்ளை சட்டையில் மாஸாக வந்த விஜய்..! அரசியலுக்கு அச்சாரமா...?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/20/119751805099e45de23f26c821012cd61668937598164571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Vijay Fans Meeting: சென்னை பனையூரில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் சந்தித்தார்.
ரசிகர்களை சந்தித்தார் விஜய்
தென்னிந்திய திரையுலகில் முன்னனி நடிகராக இருக்கும் விஜய், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். கடந்த 5 ஆண்டுகளில் ரசிகர்களை நேரடியாக சந்திக்காமல் இருந்து வந்தார். அவ்வப்பொழுது குறிப்பிட்ட ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை மட்டுமே சந்தித்து வந்த நிலையில், மாவட்ட வாரியாக இருக்கும் ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று பிற்பகல் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு வந்துள்ளார். விஜய் இந்த கூட்டத்திற்கு வெள்ளை நிற சட்டையில் வந்திருந்தார். இந்த கூட்டத்திற்கு நாமக்கல் சேலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் இதர அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் வந்துள்ளனர்.
இந்த மூன்று மாவட்ட நிர்வாகிகளை விஜய் நேரடியாக சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இதற்கான ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் அனுமதி அட்டை கொடுக்கப்பட்டு, அனுமதி அட்டை இருப்பவர்கள் மட்டுமே உள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இருக்கும் ரசிகர்களை நேரடியாக, சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த வாரங்களில் பிற மாவட்ட ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் மக்கள் இயக்க அலுவலகத்துக்கு நடிகர் விஜய் வருகை!https://t.co/wupaoCQKa2 | #ActorVijay #Panaiyur #Vijay #ThalapathyVijay @actorvijay pic.twitter.com/4kV50mwtfD
— ABP Nadu (@abpnadu) November 20, 2022
அரசியல் பரபரப்பு
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட பொறுப்பாளர்களை விஜய் நேரடியாக அழைத்து, பாராட்டு தெரிவித்தது மட்டுமில்லாமல் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு கிளப்பி இருந்தது. தொடர்ந்து விஜய் விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய் இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்க ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். மேலும் இந்த கூட்டத்தில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு மதிய உணவாக 500க்கு மேற்பட்டோர் பிரியாணி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையில் இயக்கத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், அதில் நடிகர் விஜய்யின் ஆதரவு குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாரிசு படம் சர்ச்சை
விஜய்யின்ர் வாரிசு படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் தெலுங்கு சங்கம் பிற மாநில படங்களை முக்கிய தினத்தன்று வெளியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இதுதொடர்பாகவும் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)