பா ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் படத்தின் நாயகியாக ஷோபிதா...முழு விபரம் இதோ
தங்கலான் படத்தைத் தொடர்ந்து பா ரஞ்சித் அடுத்தபடியாக இயக்கவிருக்கும் வேட்டுவம் படத்தில் ஷோபிதா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

பா ரஞ்சித்தின் அடுத்த படம்
அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக கால்பதித்தவர் ரஞ்சித். மெட்ராஸ் , கபாலி , காலா , சார்பட்ட பரம்பரை என தொடர்ச்சியாக தனது படங்களில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான விவாதத்தை நிகழ்த்தி வருகிறார். இயக்குநராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராக பல நல்ல படங்களை தயாரித்து வருகிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்தை ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு இவர் இயக்கிய தங்கலான் திரைப்படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. தமிழ் தவிர்த்து இந்தியிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தங்கலான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்கு தயாராகியுள்ளார் ரஞ்சித்.
பா ரஞ்சித் படத்தில் ஷோபிதா
அடுத்தபடியாக வேட்டுவம் படத்தை இயக்கவிருக்கிறார். ரஞ்சித். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 2022 ஆம் ஆண்டு சர்வதேச கான் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. ஆர்யா , அட்டகத்தி தினேஷ் , கலையரசன் ஆகியோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். இன்னும் ஒரு சில நாட்களில் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில் படத்தில் நாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வேட்டுவம் படத்தில் ஷோபிதா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்
இதையும் படிங்க : Jailer 2 : பூஜையுடன் தொடங்கியது ஜெயிலர் 2 படப்பிடிப்பு...யார் யார் நடிக்கிறார்கள் ?
தமிழில் இந்தி , தெலுங்கு படங்களில் ஷோபிதா நடித்திருந்தாலும் தமிழில் இதுவரை சோலோவாக ஷோபிதா நடிக்கவில்லை. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வேட்டுவம் படத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு பெரியளவில் முக்கியத்துவம் இருப்பதாக கூறப்படுகிறது.