வியக்கவைக்கும் பாம்பன் புதிய ரயில் பலம்!
அதிநவீன தொழில்நுட்பம் மூலம் புதிய ரயில் பாலம் ரூ.535 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது
நீண்ட வருடங்கள் செயல்பட்ட பழைய ரயில் பாலம் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், புதிய பாலம் கட்டும் பணிகள் 2019 இல் தொடங்கியது
கிட்டத்தட்ட 500 தொழிலாளர்கள் கொண்டு, 5 ஆண்டுகளுக்கு மேலாக கட்டுமான பணிகள் நடந்து முடிந்திருக்கிறது
நாட்டிலேயே முதன்முறையாக செங்குத்து தூக்குப்பாலம் கட்டப்பட்டிருக்கிறது. இதனுடன் 2 மாடி கட்டிடத்தில் ஆபரேட்டர் அறை, ட்ரான்ஸ்பார்மர் அறை, மின்சார கேபிள் போன்ற சாதனங்கள் வைப்பதற்கான அறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது
27மீ உயரம் கொண்ட தூக்கு பாலம் 17மீ வரை மேலே உயர்த்தப்படும். இதில் வின்ச் மோட்டார் தொழில்நுட்பம் உள்ளதால், ஐந்து நிமிடத்திலேயே ஏற்றி இறக்க முடியும்.
பழைய பாலத்தை விட உயர்த்தி கட்டியுள்ளதால், சிறிய படகுகள் தானகவே சென்று வரும் வசதி இருக்கிறது
பழைய ரயில் பாலத்தில் 20 கி.மீ வேகத்தில் மட்டுமே ரயிலை இயக்க முடியும். புதிய ரயில் பாலத்தின் நவீன தொழில்நுட்பத்தால், 75 கி.மீ வேகத்திற்கு ரயிலை இயக்க முடியும்
மொத்தம் 333 கான்க்ரீட் அடித்தளம் போடப்பட்டுள்ளது. அதன் மேலே 99 இணைப்பு இரும்பு கார்டர்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.
2024ல் பணிகள் நிறைவுபெற்ற நிலையில், இந்த மாதம் பாம்பன் புதிய ரயில் பாலம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது