Jailer 2 : பூஜையுடன் தொடங்கியது ஜெயிலர் 2 படப்பிடிப்பு...யார் யார் நடிக்கிறார்கள் ?
Jailer 2 Pooja : நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது

ஜெயிலர் 2
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதீயாக மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகத்தை அறிவித்தது சன் பிக்ச்சர்ஸ். ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு ப்ரோமோவை கடந்த ஆண்டு படக்குழு வெளியிட்டதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இன்று சென்னையில் ஜெயிலர் 2 படத்தின் பூஜை நடைபெற்று படப்பிடிப்பு தொடங்கியது. முதற்கட்டமாக 14 நாட்கள் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Muthuvel Pandian's hunt begins!💥 #Jailer2 shoot starts today🌟@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/v72a7wXpDH
— Sun Pictures (@sunpictures) March 10, 2025
ஜெயிலர் முதல் பாகம் உலகளவில் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்த நிலையில் கோலிவுட்டின் முதல் 1000 கோடி வசூலிக்கும் படமாக ஜெயிலர் 2 படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
முந்தைய பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் , மிர்னா மேனன் , யோகிபாபு , ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் இப்படத்திலும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். அதே நேரம் முந்தைய பாகத்தில் மோகன்லால் , ஷிவராஜ்குமார் நடித்திருந்த நிலையில் இந்த பாகத்தில் பாலையா சிற்ப்பு தோற்றத்தில் நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன
கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தையும் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். சத்யராஜ் , நாகர்ஜூனா , ஸ்ருதி ஹாசன் , செள்பின் சாஹிர் , உபேந்திரா ஆகியோர் படத்தில் நடித்துள்ளார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

