5 Years of Kaala : க்யாரே.. செட்டிங்கா.. இது காலா கில்லா.. காலா ரிலீஸாகி 5 வருஷமாகிடுச்சா..
காலா திரைப்படம் வெளியாகி ஐந்து அண்டுகள் நிறைவடைகின்றன. பா. ரஞ்சித் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இரண்டாவது முறையாக இயக்கிய திரைப்படம் காலா.
மக்களிடத்தில் மாஸ் வரவேற்பைப் பெறவில்லை எனினும், காலாவை இயக்குநர் ரஞ்சித் காலா தனக்கு மிக பிடித்தமான ஒரு படம் என்றும் அதே நேரத்தில் தான் அதிக சிரத்தை எடுத்துக்கொண்ட ஒரு படமாக பல நேர்காணலில் குறிப்பிடுகிறார். சில நேரங்களில் ஒரு கலைஞனின் உளமார்ந்த வாக்குமூலத்தை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். அப்படி செய்வதே அந்த கலைஞனை புரிந்துகொள்ள நாம் புரிந்துகொள்ள செலுத்த வேண்டிய உழைப்பும் மரியாதையும்.
ஒருவேளை நாம் காலா திரைப்படத்தை நாம் மறுபடியும் ஒருவரை பார்க்க நேர்ந்தால் என்ன அம்சங்களை சற்று அதிக கவனம் செலுத்தி பார்க்க முயற்சிக்கலாம் அப்படி செய்தால் நிஜமாகவே காலா படம் நிஜமாகவே ரஞ்சித் குறிப்பிடும் முழு அர்த்தத்தில் புரிந்துகொள்ள முடியலாம்.
கதாபாத்திரங்கள்.
காலா படத்தின் கதாபாத்திரங்கள் தொடக்கம் முடிவு என கச்சிதமாக உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள்.உதாரணத்திற்கு சில கதாபாத்திர அம்சங்களைப் பார்க்கலாம். காலா கதாபாத்திரம் படத்தில் பேசும் முதல் வசனம் என்னவென்று கவனித்துப் பாருங்கள்.
தொடக்கக்காட்சியில் சிறுவர்களுடன் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் காலா, தனது மகனான லெனின் பங்கேற்ற ஒரு போராட்டத்தில் கலவரம் ஏற்பட அதை காலா நிறுத்தச் செல்கிறார். காலா ஸ்பாட்டிற்கு செல்கிறார் அங்கு சம்பத் கதாபாத்திரம் பல்வேறு வசனங்கள் பேசுகிறது. ஒரு கட்டத்தில் நீங்க எல்லாம் என்ன சட்டம் பேசுறது எனச் சொல்ல அங்குதான் ரஜினியின் முதல் வசனம் தொடங்குகிறது. "சட்டத்தப் பத்தி எங்ககிட்ட பேசுறியா?" என்று தொடங்கும். ஒரு கதாபாத்திரத்தின் முதல் வசனத்தை இத்தனை சிரத்தையுடன் எழுதுவதை புரிந்துகொள்வது என்பது, ஒரு உழைப்பை புரிந்துகொள்வதற்கான முன்னெடுப்பு.
லெனின்
காலா கிட்டத்தட்ட ஒரு கட்டப்பஞ்சாயத்து செய்யும் கதாபாத்திரம். அரசியல் திட்டங்கள் இவற்றில் எல்லாம் அதற்கு பெரும்பாலும் நம்பிக்கை இருப்பதில்லை. காரணம் அது மக்களுடன் நேரடி வாழ்க்கையில் இருக்கும் கதாபாத்திரம். உழைக்கும் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை பார்க்கும் ஒருவரால் எந்த விதமான அரசியல் திட்டங்களிலும் மக்களுக்கான நலனைப் பார்க்க முடியாது. அதில் அரசின் லாப நோக்கத்தையே அந்த கண்கள் முதலில் பார்க்கும். அப்படியான ஒரு கதாபாத்திரத்தின் மகன் லெனின்.மணிகண்டன் ஒரு போராளி சிந்தனைகொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மக்கள் வாழ்க்கையை அரசியல் திட்டங்ளின் வழியாக முன்னேற்ற முடியும் என்று மனதார நம்புபவர் கதாபாரத்திரம் லெனின்.
ஒரு சித்தந்தவாதியாக இருக்கும் லெனின் கதாபாத்திரம் ஒரு வகையில் எதார்த்த நிலவரம் அறியாதது தான். மக்களுக்கு உதவி செய்ய நினைக்கும் லெனின் மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்துகொள்ளாத கதாபாத்திரமாக உருவாக்கியிருப்பார். ரஞ்சித் கம்யுனிசவாதிகளின் மேல் வைக்கும் விமர்சனமாக இது பார்க்கப்படுகிறது.ஆனால் ரஞ்சித் எந்த அளவிற்கு நேர்மையாக தனது கதாபாத்திரத்தை உருவாக்கியிருப்பார் என்றால் மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் தனது எண்ணம் நிறைவேறாத அதிருப்தியில் லெனின் கதாபாத்திரம் மனம் உடைந்து கண்ணீர் வடிக்கும் ஒரு கதாபாத்திரமாக இருக்கும்.ஒரு லட்சியவாதி தனது மக்களுக்காக கண்ணீர் சிந்துவதே அந்த கதாபாத்திரத்தின் நிஜம்.
இந்த மாதிரி படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரம் மற்றும் காட்சியிலும் தொடக்கம் முடிவு என அதற்கான இலக்கணம் பின்பற்றப்பட்ட திரைக்கதை வடிவம் காலா. இரண்டு படங்களில் அதை முயற்சித்த இயக்குநர் ரஞ்சித்துக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம்.