Sarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்
பாஜகவின் அடுத்த தலைவராக அண்ணாமலையே தொடர்வாரா இல்லை நயினார் நாகேந்திரனை நியமிக்கப்படுவாரா என்ற கமலாலயத்தில் பேச்சுக்கள் எழுந்த நிலையில் தற்போது சரத்குமார் பாஜகவின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் நாட்டின் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போதைய தலைவராக இருக்கும் அண்ணாமலையையே மீண்டும் டெல்லி தலைமை தலைவராக நியமிக்கப்போகிறாதா இல்லை புதிய தலைவரை நியமிக்க உள்ளதா என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.
கடந்த காலங்களில் பாஜக தலைவர்களாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரெல்லாம் இரண்டாவது முறையாகவும் தலைவர்கள் ஆகியிருக்கிறார்கள். அதன்படி பார்த்தால் அண்ணாமலையை தான் மீண்டும் தமிழக பாஜக தலைவராக அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் தலைவர் ரேசில் தங்களது சோர்ஸை வைத்து நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் டெல்லி பாஜவிற்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.
இப்படி இவர்களில் யார் அடுத்த பாஜக தலைவர் என்று எதிர்பார்ப்பு உள்ள நிலையில், பாஜக தொண்டர்களே எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்று ஏற்ப்பட்டுள்ளது. அதாவது சரத்குமாரை பாஜகவின் புதிய தலைவராக நியமிக்க டெல்லி தலைமை முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக தூங்கிக்கொண்டிருக்கும் போது தான் நடத்தி வந்த சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைக்க வேண்டும் என்று தோன்றியதன் அடிப்படையில், கட்சியை கலைத்த்து விட்டு பாஜகவில் சாதாரண உறுப்பினராக இணைந்தார் சரத்குமார். ஆனால் அவருக்கு பொறுப்புகள் எதுவும் பாஜகவில் வழங்கப்படவில்லை. அதே நேரம் அவரது மனைவி ராதிகா விருது நகர் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியிருந்தது.
அவர் கட்சியில் இணைந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் எந்த பொறுப்பும் வழங்கப்படாமல் இருப்பது அவரது ஆதரவாளர்கள் இடையே அதிருதிப்தியை ஏற்படுத்தியது. இச்சூழலில் தான் அண்ணாமலைக்கு எதிராக வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கி வரும் சூழலில் இவர்கள் இருவரையும் கலட்டி விட்டு தமிழக பாஜக தலைவராக சரத்குமாரை நியமிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தான் கமலாலய சீனியர்களை கடுப்பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.





















