ஒரு நாளைக்கு 12 பீர்.. டாக்டருடன் அத்து மீறிய உறவு - படு ஜோராக வாழ்ந்து 45 வயதில் மறைந்த கலாபவன் மணியின் மறுபக்கம்!
தென்னிந்திய திரையுலகை தனது நகைச்சுவை மற்றும் நடிப்பு திறமையால் ஆட்டி படைத்த உச்ச நச்சத்திரம் ஒருவரை பற்றி மூத்த பத்திரிகையாளர் கூறியுள்ள தகவல் பற்றி பார்க்கலாம்.

கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் நடிகர் கலாபவன் மணி. ஆட்டோ டிரைவராக இருந்து பின்னர் நாடக கலைஞராக மாறினார். அதன் பிறகு தன்னுடைய மிமிக்கிரி திறமையால். கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றிக் கொண்டார். மலையாளத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள இவர், மம்மூட்டி - மோகன் லாலுக்கு நிகராக சம்பளம் பெரும் நடிகராக உயர்ந்தார்.
இந்த நிலையில் தான், கடந்த 2016-ஆம் ஆண்டு... திடீர் என ரத்த வாந்தி எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரை பரிசோதித்த மருத்துவர்கள் கலாபவன் மணி குடித்த மதுவில் உயிரை கொள்ளும் நச்சு கலந்துள்ளதை கண்டு பிடித்தனர். மேலும் தற்போது வரை இவரது மரணத்தை சுற்றி பல மர்மங்கள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் மூத்த பத்திரிக்கையாளரான சபிதா ஜோசப் கலாபவன் மணி குறித்து முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். ரியல் ஒன் மீடியாவிற்கு அளித்த பேட்டியில் இவர் கூறியிருப்பதாவது: கலாபவன் மணி மிகச்சிறந்த மனிதர், சிறந்த நடிகரும் கூட. இவ்வளவு ஏன் நாட்டுப்புற பாடல்களை பாடக் கூடியவர். சிறந்த டப்பிங் கலைஞரும் கூட.
மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் தனக்கு தானே டப்பிங் பேசக் கூடியவர். விக்ரம் நடிப்பில் வந்த ஜெமினி படத்தில் சிறந்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். வில்லனாக மட்டுமின்றி மிமிக்ரி கலைஞராகவும் தன்னை நிரூபித்தார். பண்ணை வீட்டில் வேலை பார்த்து வந்த அப்பாவிற்காக அந்த பண்ணை வீட்டையே விலைக்கு வாங்கி அந்த வீட்டிற்கு அப்பாவை உரிமையாளராக்கி அழகு பார்த்தார்.

பெரும்பாலான நேரங்களில் அப்பாவுடன் அந்த பண்ணை வீட்டிலேயே இருந்தார். அதே போன்று தனது சினிமா நண்பர்களையும் அந்த வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார். அப்படி இருந்த கலாபவன் மணி மறைவிற்கு பிறகு அந்த பண்ணை வீட்டிலேயே அடக்கம் செய்ய்யப்பட்டார். கலாபவன் மணிக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. அவர் நாள் ஒன்றிற்கு சுமார் 12 பீர் வரையில் குடிப்பாராம். அவரை தேடி ஏராளமான பெண்கள் வருவார்களாம். உதவி என்று தேடி வருபவர்களுக்கு வாரி வாரி கொடுப்பாராம். இவ்வளவு ஏன் வீடு இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளார். மருத்துவனையும் கட்டி கொடுத்திருக்கிறார்.
எப்போதும் பிஸியான நடிகராக வலம் வந்த கலாபவன் மணி, மறைவுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதாவது, அவருக்கு சூனியம் வைத்ததாக சொல்லப்படுகிறது. பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு இறந்ததாக சொல்லப்படுகிறது. இரத்த வாந்தி எடுத்ததாகவும் சொல்லப்படுகிறாது. இப்படி பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அவர்கள் 35 பக்கத்திற்கு அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் இயற்கை மரணம் என்று கூறப்பட்டுள்ளது. கலாபவன் மணியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பண்ணை வீட்டிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகாவிலிருந்தும் ரசிகர்கள் வந்து செல்கிறார்கள்.

அவருக்கு ஆரம்பத்தில் சமாதி கட்டவில்லை. அப்போது அவரது உடல் அடக்கம் செய்யட்ட இடத்திலிருந்து மண் அள்ளி செல்வார்களாம். இதனால், ஒரு சிலர் பயந்தும் போயிருக்கிறார்கள். இப்படி பலரும் மண் எடுத்து செல்வதால் உடனடியாக சமாதியும் கட்டப்பட்டது. மதுப்பழக்கம் மட்டுமின்றி கஞ்சா குடிக்கும் பழக்கமும் இருந்தாக சொல்லப்படுகிறது. அதோடு, அவருக்கும் பிரபல பெண் டாக்டருக்கும் இடையில் முறைதவறிய தொடர்பும் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. கலாபவன் மணி மற்றும் அந்த பெண் டாக்டரின் கள்ளத் தொடர்பால் கலாபவன் மணி தனது மனைவியை பிரிந்து விடுவாரோ என்ற பயம் அவரது உறவினர்களிடம் இருந்ததாக அப்போது செய்திகள் வெளியானதாக சபிதா ஜோசப் கூறியிருக்கிறார்.





















