1ஆம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை.. கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?
ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயில உதவித்தொகை பெறுவதற்காக மின்னணு முறையில் விண்ணப்பிக்குமாறு மத்திய அரசின் தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்கள் ஆகியோரின் குழந்தைகள், ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயில உதவித்தொகை பெறுவதற்காக மின்னணு முறையில் விண்ணப்பிக்குமாறு மத்திய அரசின் தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இத்திட்டத்தின் கீழ், 2025-26ஆம் நிதி ஆண்டில், 1,000/- ரூபாய் முதல் 25,000/- ரூபாய் வரை, கல்வி உதவித்தொகை பெறலாம்.
https://scholarships.gov.in என்கிற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில், பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்ப்பிக்கலாம்.
கல்வி உதவித்தொகை பெற தகுதிகள் என்னென்ன?
ஒவ்வொரு மாணவரும், தங்களுக்கென தனியாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின், மைய வங்கி அமைப்பு தொழில்நுட்பமுறையில் தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணை, தங்களுடைய சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர்.
கடைசி தேதி எப்போது?
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31/08/2025. மற்ற அனைத்து உயர் கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31/10/2025.
மேற்கொண்டு விளக்கங்கள், உதவிகளை பெறுவதற்கு கீழ்கண்ட முகவரியையும், தொலைபேசி எண்ணையும் அணுகலாம்:-
மத்திய நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு,
தரைத்தளம், சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம், திரு.வி.க.தொழில் பூங்கா , கிண்டி, சென்னை – 600032.
மின்னஞ்சல் – wclwo.chn-mole[at]gov[dot]in தொலைபேசி எண்: 044-29530169
கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி தொடர்பு கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
இதையும் படிக்க: Priyanka Deshpande: கல்யாணம் ஆன இரண்டே மாதத்தில் பிரியங்காவுக்கு இப்படியா ஆகணும்! அவரே வெளியிட்ட புகைப்படம் - வருந்தும் ரசிகர்கள்!
இதையும் படிக்க: JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!





















