ஆர்சிபியின் உண்மையான தூதுவன்... தூசியை தங்கமாக்கும் ஆண்டி பிளவர்.. இத்தனை கோப்பையை வென்றவரா
ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே ஏலத்தில் பெங்களூரு அணி நல்ல பந்து வீச்சாளர்களை எடுக்க வேண்டும் என்கிற நோக்கில் வீரர்களை எடுத்து தற்போது

கிட்டத்தட்ட 18 ஆண்டுக்கால காத்திருப்புக்கு பின் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவர்.
ஆர்சிபி சாம்பியன்:
18வது ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின, இந்தப்போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசியது, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்கள் எடுத்தது.
பின்னர் இலக்கை துரத்திய பஞ்சாப் ரன் எடுக்க முடியாமல் திணறியதால் இலக்கை எட்ட முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை வென்றது ஆர்சிபி அணி.
வெற்றிக்கு பிறகு பலரும் ஆர்சிபி அணியை வாழ்த்தி வரும் நிலையில் அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கியம் காரணம் பயிற்சியாளர் ஆண்டி பிளவர்.
யார் இந்த ஆண்டி பிளவர்?
ஜிம்பாவ்வேயை சேர்ந்த ஆண்டி பிளவரி உலகில் பல்வேறு லீக் தொடர்களில் பயற்சியாளராக பணியாற்றியுள்ளார். இது மட்டுமில்லாமல் இவர் தலைமையில் இங்கிலாந்து அணி டி20 உலகக்கோப்பையை 2010 ஆம் ஆண்டு வென்றது, தொடர்ந்து இந்தியாவை அதன் சொந்த மண்ணில் இங்கிலாந்து வீழ்த்த மிக முக்கிய காரணமாக இருந்தார் பிளவர். அவரின் பயிற்சி காலத்தில் தான் இங்கிலாந்து அணி நம்பர் 1 டெஸ்ட் அணியாக உருவெடுத்தது.
செய்த சாதனைகள்:
- 2010 டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து சாம்பியன்
- ஆஷஸ் 2010-2011: ஆஸ்திரேலியாவில் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி
- அபுதாபி T10 2019: மராத்தா அரேபியன்ஸ் அணி சாம்பியன்
- அபுதாபி T10 2021: டெல்லி புல்ஸ் அணி இறுதிப் போட்டி வரை
- அபுதாபி T10 2021-22: டெல்லி புல்ஸ் அணி இறுதிப் போட்டி வரை
- CPL 2020-செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி இறுதிப் போட்டி வரை
- PSL 2021- முல்தான் சுல்தான்ஸ் அணி சாம்பியன்
- CPL 2021-செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி இறுதிப் போட்டி வரை
- PSL 2022- முல்தான் சுல்தான்ஸ் அணி இறுதிப் போட்டி வரை
- நூறு 2022 - டிரென்ட் ராக்கெட்ஸ் அணி சாம்பியன்
- ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளே ஆஃப் வரை
- ILT20 2023- கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி சாம்பியன்
- PSL 2023- முல்தான் சுல்தான்ஸ் அணி இறுதிப் போட்டி வரை
- ஐபிஎல் 2023- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளே ஆஃப் வரை
- ஐபிஎல் 2024- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் வரை
- ஐபிஎல் 2025- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன்.
𝘐 𝘶𝘴𝘶𝘢𝘭𝘭𝘺 𝘸𝘪𝘯 𝘵𝘩𝘪𝘯𝘨𝘴 𝘪𝘯 𝘮𝘺 𝘴𝘦𝘤𝘰𝘯𝘥 𝘺𝘦𝘢𝘳. 😎
— Royal Challengers Bengaluru (@RCBTweets) June 4, 2025
Sir Andy Flower. 🫡 pic.twitter.com/pymBSmSlHA
ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே ஏலத்தில் பெங்களூரு அணி நல்ல பந்து வீச்சாளர்களை எடுக்க வேண்டும் என்கிற நோக்கில் வீரர்களை எடுத்து தற்போது ஆர்சிபி அணி மற்றும் ரசிகர்களின் கோப்பை தாகத்தை தீர்த்து வைத்துள்ளார் பயிற்சியாளர் ஆண்டி பிளவர்.





















