திருப்பதிக்கு வருகிறது வந்தே பாரத் ரயில்... ! 3 மணி நேரம் மிச்சம்
புதிய வந்தே பாரத் ரயிலால் இந்த நேரம் 9 மணி நேரமாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 3 மணி நேரம் மிச்சமாகும்.

சென்னை: இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. விஜயவாடா- திருப்பதி-காட்பாடி-பெங்களுரு இடையே புதிய வந்தே பாரத் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் நடுத்தர முதல் நீண்ட தூர அரை-அதிவேக சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் சேவையாகும் . இது 800 கிமீ (500 மைல்) க்கும் குறைவான தூரத்தில் உள்ள அல்லது ஏற்கனவே உள்ள சேவைகளுடன் பயணிக்க பத்து மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தை எடுக்கும் நகரங்களை இணைக்கும் முன்பதிவு செய்யப்பட்ட , குளிரூட்டப்பட்ட நாற்காலி கார் சேவையாகும். மேலும் 800 கிமீ (500 மைல்) முதல் 1,200 கிமீ (750 மைல்) இடைவெளியில் உள்ள நகரங்களை இணைக்கும் திட்டமிடப்பட்ட முன்பதிவு செய்யப்பட்ட, குளிரூட்டப்பட்ட ஸ்லீப்பர் சேவையாகும். இந்த ரயில் அரசாங்கத்தின் 'மேக் இன் இந்தியா' முயற்சியின் ஒரு பகுதியாகும் மற்றும் பிப்ரவரி 15, 2019 அன்று வணிக சேவையில் நுழைந்தது.
இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது, இதில் பதினாறு பெட்டிகள் கொண்ட 15 ரயில்கள், இருபது பெட்டிகள் கொண்ட 8 ரயில்கள் மற்றும் எட்டு பெட்டிகள் கொண்ட 43 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மேலும், ஒரு வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதாவது, விஜயவாடாவிலிருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கோஸ்தா, ராயலசீமா பகுதிகளை இணைக்கும் வகையில் விஜயவாடாவிலிருந்து பெங்களூரு வரை இயக்கப்பட உள்ளது. தற்போது விஜயவாடாவிலிருந்து பெங்களூரு செல்ல குறைந்தது 12 முதல் 16 மணி நேரம் வரை ஆகிறது. புதிய வந்தே பாரத் ரயிலால் இந்த நேரம் 9 மணி நேரமாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 3 மணி நேரம் மிச்சமாகும்.
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கும் இந்த ரயில் சேவை மிக உதவியாக இருக்கும். குறிப்பாக திருமலை பக்தர்களுக்கு குண்டூர், அமராவதி, விஜயவாடாவிலிருந்து திருப்பதிக்கு 5 மணி நேரத்தில் செல்லலாம். இந்த வந்தே பாரத்துக்கு இரண்டு வழித்தடங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதன்படி, அனந்தபூர் வழித்தடம்: விஜயவாடா, குண்டூர், நந்தியால், குண்டக்கல், அனந்தபூர், இந்துப்பூர் பெங்களூரு. இதனால் அமராவதிக்கும் இணைப்பு கிடைக்கும். திருப்பதி வழித்தடம் (முக்கிய பரிந்துரை): விஜயவாடா, தெனாலி, ஓங்கோல், நெல்லூர், திருப்பதி, சித்தூர், காட்பாடி, ஜோலார்பேட்டை கிருஷ்ணராஜபுரம் பெங்களூரு.
இந்த வழித்தடத்துக்கு பயணிகள் மத்தியில் எப்போதும் வரவேற்பு அதிகமாக இருக்கும். மேலும், இந்த வழித்தடத்தில் திருப்பதி, சித்தூர் போன்ற ஊர்களில் கோயில் தலங்கள் இருப்பதால் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதனால் திருப்பதி வழித்தடம்தான் இறுதி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ரயில் விஜயவாடாவிலிருந்து காலை 5.15 மணிக்குப் புறப்பட்டு தெனாலி 5.39, ஓங்கோல் 6.28, நெல்லூர் 7.43, திருப்பதி 9.45, சித்தூர் 10.27, காட்பாடி 11.13, கிருஷ்ணராஜபுரம் 13.38, பெங்களூரு 14.15க்கு வந்தடையும். மறுமார்க்கமாக பெங்களூருவிலிருந்து மதியம் 14.45, புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம் 14.58, காட்பாடி 17.23, சித்தூர் 17.49, திருப்பதி 18.55, நெல்லூர் 20.18, ஓங்கோல் 21.29, தெனாலி 22.42, விஜயவாடா 23.45 மணிக்கு வந்தடையும் என திட்டமிடப்பட்டுள்ளது. கோஸ்தா, ராயலசீமா பகுதிகளை இணைக்கும் வகையில் விஜயவாடாவிலிருந்து பெங்களூரு வரை இயக்கப்பட உள்ளது.






















